Jul 13, 2010

கண்டுபிடித்து தாருங்கள் என் காதலியை

 

இன்னும் எத்தனை நாள் தான்
உன் பேச்சில்
நான் உறைந்து போவதாயும் 
உன் முத்தங்களில்
உயிர் கரைந்து போவதாயும்
உன் வெட்கங்கள்
என்னை கொள்ளை கொண்டதாகவும் 
கற்பனையாய் எண்ணிக் கொண்டு
கவிதைகளை வெளி வரச் சொல்லி
கட்டாயப் படுத்துவது?

எங்கே இருக்கிறாய்?
உனக்காய் எழுதிய கவிதைகளை
காண்பிக்கப்பதற்க்காக என்னுடைய
கவிதை நோட்டின் தாள்கள்
காற்றில்
பட படத்து கொண்டிருக்கின்றன. 

வார இறுதி நாட்களில்
கடற்கரைக்கு சென்று
உனக்கும் சேர்த்து
மணல் வீடு கட்டி வைத்து
காத்து கொண்டிருக்கிறேன்.

பேருந்து நிறுத்தங்களில்
திருவிழா கூட்டங்களில்
காபி விடுதிகளில்
இன்னும் இதர இடங்களில்
உன்னை தேடி கொண்டு இருக்கிறேன்
திசை காட்டி கருவி இல்லாது
சுற்றி கொண்டிருக்கும்
ஒரு மாலுமியாக.





5 comments:

தனி காட்டு ராஜா said...

//கண்டுபிடித்து தாருங்கள் என் காதலியை//

காதலி கிடச்சவன்(முக்கியமா அவளையே கல்யாணம் பண்ணி கொள்பவர்கள் ) எல்லாம் எங்கட கொண்டு போய் இவளை தொலைச்சிட்டு வரலாமுனு நெனச்சிட்டு இருகராங்க ...நீங்க என்னடான கண்டு புடிச்சு தர சொல்லாரீங்க ..... இது தான் உலகம் போல ...

கண்ணகி said...

கவிதை இனோரு கவிதையைத்தேடுகிறது.

ஆர்வா said...

தலைப்பே கவிதையாய் இருக்குங்க.. அருமை...

soundr said...

//கண்டுபிடித்து தாருங்கள் என் காதலியை//

அட, நம்மள இன்னும் யோக்கியன்னு இந்த உலகம் நம்புதா!!!!??


http://vaarththai.wordpress.com

அன்புடன் நான் said...

கவிதை நல்லாயிருக்கு....
நான் கண்டுபிடித்து விட்டேன்....


உங்க இதயத்தில் தான் உட்காந்திருக்காங்க.