கண்ணுக்கு மையிட்டு கவிழ்த்துகின்ற பார்வையாலே கதையொன்று எழுதுகிறாய் காகிதமாய் நான் மாற. பார்க்கும் பார்வைகளை அழுத்தமாய் பார்க்காதே ஈர்க்கும் உன் (இ)மையால் என் இதயம் உய்த்து விடும்.
என் வாழ்கையின் அர்த்தங்களை வரிகளாய் எழுதுகிறாய் என்று எண்ணிதான் காற்றில் பட படத்திருந்தேன். முழுதாக முடிக்கும் முன்னே எடுத்து எறிந்தாய் என்னை முள்ளை போலே காரணங்கள் யாது என்றேன் கதையில் சிறு மாற்றங்கள் என்றாய். வலி கொண்டு உணர வைத்தாய், அவை கண்கள் அல்ல முட்கள் என்று.
பொதுவாக நீண்ட தலைமுடியை வைத்துக் கொண்டு இருக்கும் பையன்களை பார்த்தாலே எனக்கு அவர்களிடம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டுமென்று தோன்றும். எப்படி அவர்களால் இப்படி வளர்க்க முடிகிறது? கஷ்டமாக இருக்காதா? இப்படி நிறைய.
தினமும் நீங்கள் காலையில் குளித்தவுடன், உங்கள் அம்மா தான் தலை துவட்டி விடுவாங்களா? இல்ல, நீங்களே பொண்ணுங்க மாதிரி தோள் மேல முடியை எடுத்து போட்டு துவட்டி கொள்வீர்களா? துவட்டிய பின், முடியை அள்ளி முடிந்து விட்டு, வாசலில் போய் கோலம் போடுவீர்களா?
ரொம்ப குறைச்சலாக முடியை கட் (வட்டு கிராப்) பண்ணி கொள்கிற எனக்கே ஏகப்பட்ட பொடுகு தொல்லை இருக்கிறது. நீங்கள் எப்படி சமாளிக்கிறீங்க? சன் மியூசிக்கோ அல்லது இசை அருவிக்கோ போன் பண்ணி கூந்தல் பராமரிப்பு பற்றி குறிப்புகள் சொல்லுவீங்களா? (சொன்னா இதை படிக்கிற பிகருங்களுக்கு எல்லாம் கொஞ்சம் உபயோகமா இருக்கும்)
வாரம் ஆனா, சனிகிழமை சீகைக்காய் போட்டு உங்கள் அம்மா உங்கள் தலையை தேய்ச்சு விடுவாங்களா? உலர வைக்க முடிக்கு சாம்பராணி புகை எல்லாம் பிடிப்பிங்களா?
இந்த பேன் தொல்லையை எப்படி சமாளிக்கீரிங்க? நடு வாசப்படியில் உட்காரவைத்து உங்களுக்கு யார் பேன் பார்ப்பாங்க?
பச்சை, சிவப்பு மாதிரி கலர்கலரா ஒரு டீ சர்ட் போட்டுக்கிட்டு போகும் போகையில், உங்களை பிகர் என்று தவறாய் நினைத்து யாராவது பாலோவ் செய்து வந்து, உங்களின் பின்புறத்தை தட்டி ஏமாந்து போய் இருக்கார்களா? நீங்கள் வேண்டுமென்றே யாரையாவது விளையாட்டுக்காக ஏமாற்றி இருக்கீங்களா?
வராவாரம் பியூட்டி பார்லர் போய் முடி பராமரிப்பு செய்வீர்களா? எத்தனை நாளுக்கு ஒரு முறை சலூனுக்கு செல்வீர்கள்? மாசம் பட்ஜெட் சமாளிக்க முடியுதா?
உங்களுக்கு கேர்ள் பிரெண்ட் இருந்துச்சுன்னா, நீங்களும் உங்க கேர்ள் ப்ரெண்டும் மாற்றி மாற்றி தலை வாரி கொள்வீர்களா? மற்ற பொண்ணுங்க எப்போதாவது உங்கள் முடியை பார்த்து பொறாமை கொண்டு அலைந்து இருக்காங்களா?
உங்கள் அக்கா தங்கச்சியோடு, முடியை பிடித்து சண்டை போட்ட அனுபவம் இருக்கா? அப்படி யாரும் இல்லாத பட்சத்தில், தண்ணி பிடிக்க போகும் போது, குழாய் அடியிலாவது சண்டை போட்டதுண்டா?
உங்க வீட்டில் யாராவது டூர் போனால், வரும் போது உங்களுக்கு ஹேர் பின், பேண்ட்(Band), கிளிப் இதெல்லாம் வாங்கிட்டு வருவாங்களா?
கிரிக்கெட் விளையாடும் போது, தலை முடி டிஸ்டர்ப் பண்ணாதா? அப்போது மட்டும் Band மாட்டிக் கொள்வீர்களா?
நீங்கள் blog வைத்திருந்தால், Hair Care பற்றி Post போடுவீங்களா?
உங்க கூந்தல் பற்றி எந்த பெண்ணாவது கவிதை எழுதி, காதலித்து பைத்தியமாய் அலைந்து இருக்காங்களா?
"இத பத்தி என்ன மயித்துக்குடா கேட்கற?" என்று கோபித்து கொள்ளாதிர்கள். யாராவது தெரிந்தால் பதில் கேட்டு சொல்லுங்களேன்.
உன்னை பார்த்து பழகிய நாள் முதலே பல வண்ணங்களால் எனது உலகையே கலகம் செய்தாய். நீல நிறங்களால் வான் நீலத்தையும் நீர்த்து போக செய்தாய். பச்சை நிறங்களில் பசுமை புரட்சி செய்தாய். மஞ்சள் நிறத்தால் சூரியனையும் சுருங்க வைத்தாய். சிவப்பு நிறத்தால் எரிமலையை குமுற வைத்தாய். இன்னும் பல பெயர் அறியபடாத நிறங்களில் மலர்களை மதி மயங்க வைத்தாய். இறுதியாக கரிய நிறத்தால் என்னை முழுதாக இருளில் மூழ்கடித்தாய். நிறங்கள் அற்று நான்.
கல்லூரி பேருந்து உன் நிறுத்தம் வருவதற்கு முன்பே ஏறி அழகாய் அமர்ந்து கொள்கிறாய் என் நினைவில். நீ வராத நாட்களில் கல்லூரி பேருந்து கரும் புகையை கக்கிக் கொண்டு என் உடலை ஏற்றி செல்லும் ஓர் சவ ஊர்தியாய் உருமாற்றம் கொள்கிறது. உனை காணும் நோக்கிலே தினமும் கல்லூரி வருவதால் வருடா வருடம் தவறாமல் பெறுகிறேன் வருகை பதிவேட்டில் நூறு சதவிகிதம். நீ இருக்கும் வரை கல்லூரி பேருந்தின் ஜன்னலோர இருக்கைகள் சிறிதும் என் கவனம் ஈர்ப்பதில்லை.