Jul 8, 2010

கிரெடிட் கார்டு Vs டெபிட் கார்டு (Real life Comparison)



இந்த கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுக்கும், நம்முடைய வாழ்க்கைக்கும் நிறையவே சம்பந்தங்கள் இருக்கிறது.


கிரெடிட் கார்டு வச்சிருகிறதுங்கறது, ஒரு பொண்டாட்டியை கட்டி குடும்பம் நடத்துவது மாதிரி. ஒன்றே ஒன்று இருந்தால் மட்டும் தான் வாழ்க்கையை கஷ்டப்படாமல் ஓட்ட முடியும். டெபிட் கார்டு மட்டும் வைத்துக் கொள்வது கல்யாணமாகாத பேச்சுலர் வாழ்க்கை மாதிரி. வாழ்க்கைய மிக சந்தோசமாக எந்த பிரச்சினையும் இல்லாமல் நம்முடைய தேவைக்கேத்த மாதிரி வாழலாம்.

கிரெடிட் கார்டாக இருந்தாலும், பொண்டாட்டியாக இருந்தாலும் ஒன்றுக்கு மேல் போனால், நீங்கள் கோடிஸ்வரனாக இருந்தாலும் அது உங்களை தெருக்கோடி பிச்சைக்காரன் ஆக்கி விடும். எங்கே?, எப்போது?, எதற்க்காக?, யாருக்காக? கடன் வாங்கினோம் என்றே தெரியாமல் போய்விடும். அதே போல் ஒரு பொண்டாட்டிய திருப்தி படுத்தறதே பெரிய விஷயம் (கேட்கறத வாங்கி கொடுத்து. ஹி! ஹி! ). ஆனா டெபிட் கார்ட்டில் எவ்வளவு பணம் இருக்கின்றதோ அதை பார்த்து, யாருக்கும் பயப்படாமல், செலவு செய்யலாம். "பெண் சிங்கம்", "வெளுத்து கட்டு" போன்றஅரிய படங்களை கூட பிளாக்கில் டிக்கெட் வாங்கி சிரிச்சுகிட்டே பாக்கலாம்.

வெளியே கடைகளில் ஷாப்பிங் போகும் போதோ, சாப்பிட ரெஸ்டாரென்ட்க்கு போகையிலோ, கிரெடிட் கார்டு உள்ள மதிப்பே தனி தான். அதேதான், சொந்தகாரங்க வீட்டிற்கு போகும் போதோ, அப்பார்ட்மென்ட்ல வாடகைக்கு வீடு கேட்கும் போதோ, கல்யாணம் ஆகி பேமலியோட போனால் தான் மரியாதை கிடைக்கும். "சார் கார்டுல பேலன்ஸ் இல்ல", "இங்க டெபிட் கார்டெல்லாம் Accept பண்ன மாட்டோம்"ன்னு அசால்ட்டா சொல்லி அசிங்க படுத்திடுவாங்க. பேச்சுலர் ஒருத்தன் வாடைகைக்கு வீடு கேட்க போகும் போது, பிச்சைக்காரனும் அங்கே வந்தான் என்றால், முதலில் நம்மளை துரத்திவிட்டு அப்புறம் தான் பிச்சைகாரனை துரத்துவார்கள். (எங்க அப்பார்ட்மென்ட்ல இருக்கிற புறா கூட என்னோட பைக்க தேடி புடிச்சு அசிங்கம் பண்ணிட்டு போய்டுதுங்க).

கையில் சுத்தமாக காசு இல்லை என்றால் கூட, கிரெடிட் கார்டு யூஸ் பண்ணி, அப்போதைக்கு ATM -ல் பணம் எடுத்து கொள்ளலாம். பொண்டாட்டிக்கிட்டேயோ அல்லது அவள் அப்பன்கிட்டேயோ பணத்தை வாங்கி விட்டு "அப்புறம் குடுக்கிறேன்னு" அல்வா குடுக்கற மாதிரி. ஆனால் காசே இல்லாமல் டெபிட் கார்டு மூலம் ATM -ல் பணம் எடுக்க போனீங்க என்றால், ATM மெசினே மூஞ்சில எச்சில் துப்பிடும். வேலை இல்லாமல் பேச்சுலராக சுற்றி கொண்டு இருந்தீங்க என்றால் பிரெண்ட்ஸ், சொந்தகாரங்க ஒருத்தனும் பைசா குடுக்க மாட்டாங்க.

சாப்ட்வேர் கம்பெனியில் வொர்க் பண்ணி மாதா மாதம் அக்கௌன்ட் நிறைய சம்பளம் வாங்கி கொண்டு இருந்தீங்கன்னா Golden, Platinum ன்னு சும்மாவே கூப்பிட்டு கிரெடிட் கார்டு கொடுப்பது போல, கிலோ கணக்குல தங்கத்தொடும் அவங்க பொண்ணையும் போட்டி போட்டுக்கிட்டு கொடுப்பாங்க. ஆனா வேலை இல்லாம வெட்டிபயலாக சுற்றிக்கொண்டு இருந்தீங்கனா, டெபிட் கார்டுக்கு அக்கௌன்ட் ஓபன் பண்ணறதுக்கே 500, 1000 ரூபாய் இருந்தால் தான் பண்ன முடியும். பொண்ணு கூட நாமளாக தான் கேராளாவில் இருந்து காசு போட்டு கட்டிகிட்டு வரணும். 

நீங்க குடும்பஸ்தரா?

கிரெடிட் கார்டு வைத்திருந்தீங்கன்னா தூக்கி எறிஞ்சுடுங்க. அப்படி நீங்களும், ரெண்டுமே வச்சு இருக்கணும்ன்னு ஆசை பட்டால், கிரெடிட் கார்டு தூக்கி எறிந்த இடத்தை உங்கள் மனைவிக்கு காண்பித்து விடுங்க. அப்புறம் அவங்களுக்கு தெரியும் என்னென்ன வாங்கனும்னு (அவங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும்).

சமையல் பாத்திரத்தியே அப்படி கை வலிக்க தேய்த்து கழுவறவங்களுக்கு, கிரெடிட் கார்டு தேய்க்கறது எல்லாம் சப்ப மேட்டரு. அதன் பின் தினமும் உங்க வீட்டில் பாச கணவனுக்கு பாராட்டு விழா நடக்கும்.  கலைஞர் தாத்தா மாதிரி உட்கார்ந்து கொண்டு சிரிக்காமல் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்.

இதை படித்து விட்டீர்களா?

இப்போ உங்க கிரெடிட் கார்டு எங்கே இருக்குன்னு பாருங்க. அப்புறம் உங்க மனைவி வீட்டில் இருக்காங்களான்னு செக் பண்ணுங்க. இரண்டுமே இல்லையா? கவலை படாதிங்க. அப்படியே உங்க ப்ரவுசர்ல இன்னொரு Tab ஓபன் பண்ணி கிரெடிட் கார்டு வெப் சைட்ல Login ஆகி எவ்வளவு பில் வந்திருக்குன்னு மட்டும் பாருங்க. வேற எதுவும் உங்களால பண்ண முடியாது.


நீங்க பேச்சுலரா? 

உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தோணுச்சுன்னா, கிரெடிட் கார்டு வச்சுகாதிங்க.  கிரெடிட் கார்டு வச்சுக்கனும்ன்னா கல்யாணம் பண்ணிக்காதிங்க. இரண்டில் எதாவது ஒன்றை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். அதையும் மீறி கல்யாணம் பண்ணுணீங்கனா, அந்த கிரெடிட் கார்டை தூக்கி உங்க பொண்டாட்டி கையில் கொடுத்து விடாதிர்கள்.


Jul 7, 2010

அந்நியாய ஆசைகள்

 
மிகவும் பிடித்தமான
கவிதை ஒன்றை
வாசிக்கும் போதெல்லாம்,
அதன் சொந்தகாரனாக
நானே
இருக்க ஆசை படுகிறேன்.

அதுவே
அழகான ஆன்டிகளை பார்க்கும் போதும்.





Jul 6, 2010

புட்பால் கிரேசி இருபத்தி நான்காம் புலிகேசி



என் பிரெண்டு முருகன் ஒரு பயங்கரமான புட்பால் பைத்தியம். அவனையும் சேர்த்து நாங்க ஆறு பேர் ஒரே வீட்ல தங்கி இருக்கோம். புட்பால் அவனோட வாழ்க்கைல ஒரு அங்கமாகவே ஆயிடுச்சு. எப்படி எல்லாம் அது அவனோட வாழ்க்கைலயும், எங்க வாழ்க்கைலயும் விளையாடுதுன்னு பாக்கலாம். 

  • தினமும் நைட் தூங்கும் போது, புட்பால்ல கொஞ்சம் காத்த புடுங்கி விட்டு தலைகாணிக்கு பதிலா, அதை தலைக்கு வச்சுதான் தூங்குவான்.
  • வெளிய போயிட்டு வந்து கழட்டிபோடுற துணிய கூட, புட்பால் மாதிரி சுருட்டி தான் மூலையில் போடுவான்.
  • பைக் வச்சிக்கிட்டு ட்ராபிக்ல நின்னுகிட்டு இருக்கும் போது கூட சிக்னல் லைட்ட பார்த்து " டேய்! ரெட் கார்டு காமிச்சிட்டாங்க, எல்லோ கார்டு போட்டுட்டாங்க "  அப்படின்னு தான் சொல்லுவான்.
  • ஏதாவது ஒரு பொண்ண பாத்து சைட் அடிக்கும் போது, அவளுக்கு பார்றா புட்பால் மாதிரி கும்முன்னு இருக்கு என்பான்.
  • இவனுக்கு பிடிச்ச ஹாலிவுட் நடிகை Bay Watch புகழ்  பமீலா ஆண்டர்சன். சின்ன வயசுல இருந்தே Bay Watch யும் புட்பால் மேட்ச்யும் டிவில,  ரிமோட்ட வச்சு swap பண்ணி  swap பண்ணி பார்த்துட்டு இருப்பான். வீட்டுக்குள்ள யாரவது வந்தா புட்பால் மேட்ச். யாரும் இல்லைனா Bay Watch. இப்படி அவனுக்கு புட்பால் தற்செயலாதான் புடிக்க ஆரம்பிச்சுது.
  • எதாவது சொந்தக்காரங்க கல்யாணமாய் இருந்தாலும் சரி, இல்ல பக்கத்துக்கு தெருல ஏதோ ஒரு பாட்டி செத்திருந்தாலும் சரி, "ரொனால்டோ" இல்ல "ரூனி" ன்னு பேரு போட்டு இருக்குற புட்பால் டீ ஷர்ட் தான் போட்டுட்டு போவான். வீட்டுல அம்மா கரண்டு பில் கட்டிட்டு வர சொன்ன கூட, Nike shoe தான் போட்டுட்டு போவான்.
  • காலேஜ்ல  படிக்கறப்ப எல்லா எக்ஸாம்லயும்  எக்ஸ்ட்ரா டைம் கேட்டு அந்த ஹாலுக்கு வர்ற சூப்பர்வைசர்ற வேணும்னே எரிச்சல் படுத்துவான்.பரீட்சையில் எந்த சப்ஜெக்டா இருந்தாலும் சரி, "Heading" மட்டும் படிச்சிட்டு போயே எழுதி பாஸ் ஆகிடுவான்.  Maths எக்ஸாம்ல மட்டும் அதனால பெயில் ஆயிடுவான்.
  • அதுவும் இந்த புட்பால் உலக கோப்பை ஆரம்பிச்சதுக்கு அப்புறம், அடிக்கடி ஆபிஸ்க்கு மட்டம் போட்ருவான். லீவ் சொல்லுறதுக்கு மேனஜர்க்கு மெயில் அனுப்பும் போது கூட Suffering  from football fever அப்படின்னு தான் அனுப்புவான்.
  • தூங்கும் போது கூட புட்பால் விளையாடுற மாதிரி கனவு கண்டு, பக்கத்துல படுத்திருக்கிற பசங்கள உதைச்சு கிட்டு தூங்க விட மாட்டான்.
  • கிரவுண்ட்ல போய் விளையாடற அளவுக்கு உடம்பு Fit இல்லைனாலும், புட்பால் கேம் கம்ப்யூட்டர்ல install பண்ணி குடுத்துட்டா போதும், கீ போர்ட உதைச்சுக்கிட்டே அவ்வளவு  அருமையா விளையாடுவான்.
  • ஸ்கூல்ல படிக்கும் போது ஸ்போர்ட்ஸ் பீரியட்ல, புட்பால் விளையாடும் போது, வேற யாராவது அடிச்சு இவனோட கால்ல பந்து பட்டா கூட, அவன்தான் பந்த டச் பண்ணதா நாலு நாளைக்கு பேசிக்கிட்டு இருப்பான். இப்படி ஒரு தடவ யாரோ அடிச்சதுல இவன் மூக்குல பட்டு சிலி மூக்கு உடைஞ்சதுல இருந்து, கீ போர்டு தவிர வேறு எதையும் தொடுறது இல்ல.
  • விளையாண்டு கோல் போட தெரியலைனாலும், மத்தவங்கள பத்தி கோல் மூட்டுறது இவனுக்கு கை வந்த கலை.
  • ஆபீஸ் மீடிங்ல பேசும் போது கூட, heading பண்ற மாதிரி தலைய ஆட்டி ஆட்டி தான் பேசுவான். புடிச்ச தமிழ் நடிகர் தல அஜித். அவர் தலைய ஆட்டி ஆட்டி டான்ஸ் ஆடுறத பாத்து (அவரால இடுப்ப ஆட்ட முடியாது) மெய் மறந்து பாக்க ஆரம்பிச்சுடுவான்.
  • அன்னிக்கு பாக்கற மேட்சுல அவனோட கிளப் டீம் தோர்த்திடுசுன்னா, அப்பவே சிஸ்டத்த ஆன் பண்ணி, FIFA கேமில் எதிர் டீமை படு கேவலமா தோற்கடிச்சுட்டு தான் சாந்தமாவான்.
  • போலியோ வந்து அட்டாக் ஆன கோழி மாதிரி இருந்தாலும், அவனோட  போர்ட்போலியோல,  extra skills பகுதியில் Football Player ன்னு தான் போட்டு இருப்பான்.
  • புட்பால் தவிர இந்த புட்பால் மண்டயனுக்கு புடிச்ச இன்னொரு கேம், கேரம் போர்டு தான். காரணம் என்னன்னு கேட்டா, அதுல Striker இருக்காம்.
  • பக்கத்துல யாராவது கொஞ்சம் பெரிய பின்புறத்தோடு படுத்திருந்தால் போதும், நைட்டு தூக்கத்துல உதைச்சு கிட்டே தான் தூங்குவான்.

சரி படிச்சுடீங்க!. ஒரு கோல் போட்டுட்டு போங்க. சாரி, ஒரு Like போட்டுட்டு போங்க. பாருங்க, பய புள்ள என்னையும் மாத்திபுட்டான். Oh! God, Save Me.




    Jul 1, 2010

    பெண்ணாகிய பேனா

     
     
    கண்ணுக்கு மையிட்டு
    கவிழ்த்துகின்ற பார்வையாலே
    கதையொன்று எழுதுகிறாய்
    காகிதமாய் நான் மாற.

    பார்க்கும் பார்வைகளை
    அழுத்தமாய் பார்க்காதே
    ஈர்க்கும் உன் (இ)மையால்
    என் இதயம் உய்த்து விடும்.

    என் வாழ்கையின் அர்த்தங்களை
    வரிகளாய் எழுதுகிறாய்
    என்று எண்ணிதான்
    காற்றில் பட படத்திருந்தேன்.

    முழுதாக முடிக்கும் முன்னே
    எடுத்து எறிந்தாய்
    என்னை
    முள்ளை போலே

    காரணங்கள் யாது என்றேன்
    கதையில் சிறு மாற்றங்கள் என்றாய்.
    வலி கொண்டு உணர வைத்தாய்,
    அவை கண்கள் அல்ல
    முட்கள் என்று.





    எனக்கு ஒரு முடி(வு) தெரிஞ்சாகனும்



    பொதுவாக நீண்ட தலைமுடியை வைத்துக் கொண்டு இருக்கும் பையன்களை பார்த்தாலே எனக்கு அவர்களிடம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டுமென்று தோன்றும்.

    எப்படி அவர்களால் இப்படி வளர்க்க முடிகிறது?
    கஷ்டமாக இருக்காதா?

    இப்படி நிறைய.

    • தினமும் நீங்கள் காலையில் குளித்தவுடன், உங்கள் அம்மா தான் தலை துவட்டி விடுவாங்களா? இல்ல, நீங்களே பொண்ணுங்க மாதிரி தோள் மேல முடியை எடுத்து போட்டு துவட்டி கொள்வீர்களா? துவட்டிய பின், முடியை அள்ளி முடிந்து விட்டு, வாசலில் போய் கோலம் போடுவீர்களா?
    • ரொம்ப குறைச்சலாக முடியை கட் (வட்டு கிராப்) பண்ணி கொள்கிற எனக்கே ஏகப்பட்ட பொடுகு தொல்லை இருக்கிறது. நீங்கள் எப்படி சமாளிக்கிறீங்க? சன் மியூசிக்கோ அல்லது இசை அருவிக்கோ போன் பண்ணி கூந்தல் பராமரிப்பு பற்றி குறிப்புகள் சொல்லுவீங்களா? (சொன்னா இதை படிக்கிற பிகருங்களுக்கு எல்லாம் கொஞ்சம் உபயோகமா இருக்கும்)
    • வாரம் ஆனா, சனிகிழமை சீகைக்காய் போட்டு உங்கள் அம்மா உங்கள் தலையை தேய்ச்சு விடுவாங்களா? உலர வைக்க முடிக்கு சாம்பராணி புகை எல்லாம் பிடிப்பிங்களா?
    • இந்த பேன் தொல்லையை எப்படி சமாளிக்கீரிங்க? நடு வாசப்படியில் உட்காரவைத்து உங்களுக்கு யார் பேன் பார்ப்பாங்க?
    • பச்சை, சிவப்பு மாதிரி கலர்கலரா ஒரு டீ சர்ட் போட்டுக்கிட்டு  போகும் போகையில், உங்களை பிகர் என்று தவறாய் நினைத்து யாராவது பாலோவ் செய்து வந்து, உங்களின் பின்புறத்தை தட்டி ஏமாந்து போய் இருக்கார்களா? நீங்கள் வேண்டுமென்றே யாரையாவது விளையாட்டுக்காக ஏமாற்றி இருக்கீங்களா?
    • வராவாரம் பியூட்டி பார்லர் போய் முடி பராமரிப்பு செய்வீர்களா? எத்தனை நாளுக்கு ஒரு முறை சலூனுக்கு செல்வீர்கள்? மாசம் பட்ஜெட் சமாளிக்க முடியுதா?
    • உங்களுக்கு கேர்ள் பிரெண்ட் இருந்துச்சுன்னா, நீங்களும் உங்க கேர்ள் ப்ரெண்டும் மாற்றி மாற்றி தலை வாரி  கொள்வீர்களா? மற்ற பொண்ணுங்க எப்போதாவது உங்கள் முடியை பார்த்து பொறாமை கொண்டு அலைந்து இருக்காங்களா?
    • உங்கள் அக்கா தங்கச்சியோடு, முடியை பிடித்து சண்டை போட்ட அனுபவம் இருக்கா? அப்படி யாரும் இல்லாத பட்சத்தில், தண்ணி பிடிக்க போகும் போது, குழாய் அடியிலாவது சண்டை போட்டதுண்டா?
    • உங்க வீட்டில் யாராவது டூர் போனால், வரும் போது உங்களுக்கு ஹேர் பின், பேண்ட்(Band), கிளிப் இதெல்லாம் வாங்கிட்டு வருவாங்களா?
    • கிரிக்கெட் விளையாடும் போது, தலை முடி டிஸ்டர்ப் பண்ணாதா?  அப்போது மட்டும் Band மாட்டிக் கொள்வீர்களா?
    • நீங்கள் blog வைத்திருந்தால், Hair Care பற்றி Post போடுவீங்களா?
    • உங்க கூந்தல் பற்றி எந்த பெண்ணாவது கவிதை எழுதி, காதலித்து பைத்தியமாய் அலைந்து இருக்காங்களா?


    "இத பத்தி என்ன மயித்துக்குடா கேட்கற?" என்று கோபித்து கொள்ளாதிர்கள்.

    யாராவது தெரிந்தால் பதில் கேட்டு சொல்லுங்களேன்.