Sep 29, 2010

காமன் வெல்த் காமெடி ஷோ - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

ஆபாயில் போட்டு ரொம்ப நாள் ஆச்சு. என்ன காரணம்ன்னு கேட்டிங்கன்னா? அவனவனுக்கு பிகர் கிடைக்காம வாழ்க்கைல ரொம்ப குஷ்டமா இருக்கு. இதுல ஆபாயிலாம், ஆம்லேட்டாம்.





This month going to be ENTHIRAN month not Octobar. எந்திரன் 1ம்  தேதி, எந்திரன் படம் ரிலீஸ்.
 தமிழர்களே! பெருமை கொள்ளுங்கள். நம் பெருமைகளை எத்திக்கும்  பரப்புவான் எந்திரன். தீபாவளி ரயில் டிக்கெட்ட விட எந்திரன் பட டிக்கெட் மிகவும் வேகமா விற்று தீர்ந்திருச்சாம். படம் வெளிவர்றதுக்கு முன்னாடியே சன் பிக்சர்ஸ் போட்ட பணத்துக்கு அதிகமாகவே எடுத்து விட்டார்கள் என்று statistics சொல்லுது. மக்களே, சீக்கிரமே எந்திரன் படத்த போய் பார்த்தறாதிங்க! அப்புறம் இன்னும் ரெண்டு மாசத்துக்கு வேற எந்த படமும் பார்க்க முடியாது. முதல் வாரத்தில் போய் படம் பார்த்தால், ரசிக கண்மணிகளின் காட்டு கத்தலில் ஒளியும் ஒளியும் மட்டும் தான் பார்க்க முடியும். அதே மாதிரி, சன் நெட்வொர்க் சேனல்களில் எல்லாமே எந்திரன் விளம்பரகளுக்கு நடுவில் மத்த நிகழ்ச்சி போடுவாங்க. ஆனால் எந்திரன் பாட்டோ, இல்ல படத்தின் வேற எந்த சீனோ அவ்வளவு சீக்கிரம் போட மாட்டாங்க. அப்புறம் தியேட்டர் எல்லாம் என்ன $%?&!# கட்டி வச்சிருக்காங்க?

சின்ன வயசுல ஸ்கூல்ல படிக்கும் போது ஜுராசிக் பார்க், அனகோண்டா மாதிரி படங்களை எல்லாம் அஞ்சு ரூபாவோ இல்ல ரெண்டு ரூபாவோ தர சொல்லி எல்லோரையும் ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு போய் படம் காமிப்பாங்க. அதுபோல எந்திரன் படத்துக்கும் குறைஞ்சது 50 ரூபாயில் பள்ளி மாணவர்களுக்கு காமிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?




காமன் வெல்த் காமெடி ஷோ, சாரி!!! விளையாட்டு போட்டி ஒரே இடி முழக்கத்தோடு களை கட்டத் தொடங்கிடுச்சு. ஹி! ஹி! கூரைல இருந்து பாலம் வரைக்கும் எல்லாமே வரிசையா இடிஞ்சு விழுகுது. இதனால பளு தூக்கும் வீரர்களுக்கு எல்லாம் நிறைய வேலை இருக்கு. இடியறத எல்லாம் அப்புறப் படுத்தனும் இல்லையா?. இந்தியன் நியூஸ் மீடியாக்கள் எல்லாம் அடுத்து என்ன இடிஞ்சு விழும்ன்னு கேமரா வச்சுக்கிட்டு பரபரப்பா கண்காணிச்சு கிட்டு இருக்காங்க. கல்மாடி பற்றிய ஜோக்குகள் சர்தார்ஜி ஜோக்குகுளை விட மிகவும் பிரபலம் ஆகிடுச்சு.

காமன் வெல்த் போட்டி நடத்தவே இவ்வளவு கஷ்டபடுற இந்தியாவுக்கு, இனி ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டி நடத்துவதற்கான வாய்ப்பு கூட கண்டிப்பா கிடைக்காது. ஒருவேளை அதிகமாக காசு கொடுத்து ஒலிம்பிக்ஸ் போட்டி நடத்துவதற்கான வாய்ப்பை இந்தியா பெற்றாலும், அப்போதும் காமன்வெல்த் போட்டியை போன்றே ஊழல்கள் நடைபெற்று, பங்கு பேரும் வீரர்கள் மீது கட்டிடம் எல்லாம் இடிந்து விழுந்து அதுவே ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியாக மாற வாய்ப்பும் அதிகமாக உள்ளது. விளையாடரதுலையும், விளையாட்டு நடத்துவதிலும், சீனாவோடு நாம போட்டி போட முடியாது. சரி, சீனாவுல கம்யுனிசம் ஆட்சி நடக்குது, அதை இந்தியாவுலயும் கொண்டு வாங்க. பார்க்கலாம்.



தமிழ்நாட்டுல விலைவாசி எக்கசக்கமா எகிறி போச்சு. நான் ரெகுலரா சாப்பிடற ஆந்திரா மெஸ்ல தான், தின கூலி வாங்கற ஆட்களும் சாப்பிடறாங்க. எப்படி இவங்க வாழ்க்கைய நடத்துறாங்க?. கலைஞர் ஆட்சியில மிடில் கிளாஸ் மக்களும் ரேசன் அரிசி வாங்கி சாப்பிடற கொடுமையான நிலைமைக்கு வந்துட்டதா எல்லோரும் புலம்பறாங்க. கருப்பு எம்ஜியார் ஆட்சிக்கு வந்தால் விலைவாசிய கட்டு படுத்துவாரான்னு தெரியாது. ஆனா, யாருக்கும் தெரியாம ஒவ்வொரு வீட்டுலயும் வந்து காதும் காதும் வச்ச மாதிரி ரேசன் பொருட்களை எல்லாம் டெலிவரி பண்ணிட்டு போய்டுவாரு. நாமளும் "எனக்கு வலிக்கலையே! வலிக்கலையே!" அப்படிங்கற மாதிரி, சீச்சீ நாங்கலாம் ரேசன் கடை பக்கமே போறதுல்ல அப்படின்னு வெளிய சொல்லிகிட்டு ரேசன் அரிசிய பொங்க வச்சு மகிழ்ச்சி பொங்க தின்னலாம்.



இது திரைப்பட துறையில் 3-D புரட்சி காலம். சென்னை சத்யம் தியேட்டர்க்கு போனால் ஆறு ஏழு படங்கள் 3-D படங்களாகவே இருக்கு. அனிமேஷன் படம் மட்டும் அல்லாமல் Narnia, Residence Evil போன்ற படங்களும் 3-D யிலே வெளிவருகின்றன. சத்யம் தியேட்டரில் பார்த்தால் ஒவ்வொரு தடவையும் 3-டி கிளாஸ் வாங்கவே தேவை இல்லாம இருபது ரூபா செலவாகுது. போன வாரம் தான் Step Up 3 படம்  3-D யில் பார்த்தேன். முதல் இரண்டு பார்ட் பார்த்து இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு படம் பிடிக்கலாம்.





Sep 28, 2010

"வாழும் நகரம்' டில்லி - நாட்டுக்கு தேவையான செய்திகள்



டில்லி, காமன்வெல்த் போட்டி நடக்கவிருக்கும், டென்னிஸ் மைதானம் அருகே பிடிபட்ட நான்கு அடி நீள நாகப்பாம்பு



அந்த பாம்பு எந்த பத்திரிக்கைன்னு கேட்டிங்களா?
இடிச்சு விழுகின்றதை எல்லாம் நாலு ஸ்டில்லு எடுத்து நியூஸ் போடலாமுன்னு வந்து இருக்கும். ஆனா அதுவே நியூஸ்ல வந்திருச்சு.


என் தலை'மையை' ஏற்கும் கட்சியிடம் மட்டுமே கூட்டணி - விஜயகாந்த்

உங்க தலைக்கு என்ன மை (dye) யூஸ் பண்றீங்க? அது நல்ல மையா இருந்துச்சுன்னா, எல்லா கட்சிகாரர்களுமே யூஸ் பண்ணுவாங்க.


"வாழும் நகரம்' டில்லி பிரதமர் வர்ணனை

ஆனா மத்த நாட்டுக்காரர்கள் இங்க வர்றதுக்கே பயந்து சாகறான்களே?



இளைஞர் காங்கிரசில் கோஷ்டி மோதல் தீவிரம்

கங்கிராட்ஸ்! வாழ்த்துக்கள். காங்கிரஸ்ல கோஷ்டி மோதல் வர்றது வேஷ்டி உருவுவது மாதிரி. ஈசியா வரும்.



மாட்டு கொட்டகையில் தங்க வைத்ததாக கணவன் குடும்பத்தினர் மீது மனைவி புகார்

மாட்டு பொண்ணுங்கறத வேற மாதிரி புரிஞ்சுகிட்டான்களோ?



த்ரிஷாவின் லிப் டூ லிப் முத்தத்தை மறுத்த நடிகர்!

ஹிப் டு ஹிப் வேணுமுன்னு கேட்டு இருப்பாரோ?



டாப்சிலிப்பில் யானை தாக்கி பாகன் 'உதவியாளர்' பலி

எவ்வளவு நாள் தான் பாகனே செத்துக்கிட்டு இருக்கிறது?





Sep 6, 2010

கடவுளின் ஆசை - தண்டர் கவிதைகள் 1.



சிட்டியெங்கும் அடுக்கடுக்காய்
ஆடம்பர மால்கள்.
கலர்கலராய் ஆடைகள், ஆபரணங்கள்.
வெள்ளையில் போதாது 
வாங்குவதற்கு தேவை
கறுப்பில் பணங்கள்.

எந்திரன் பட ரிலீஸ் ஆனா
டிக்கெட் கிடைக்குமா? 
எதிர்பார்ப்பில் தமிழ் குடிமக்கள்.
தியேட்டர் கிடைக்குமா?
கலக்கத்தில் மற்ற பட தயாரிப்பாளர்களும்,
பிட்டு பட தயாரிப்பாளர்களும்.
இனியாவது கற்று கொள்ளுங்கள்
மடையர்களே 
கழக தயாரிப்பில் இணைந்து வெளியிட.

பார்கிங் கொறைஞ்சது
பத்து ரூபா.
டிக்கெட்டு வித்த விலையில
பாப்கார்ன் பாக்கெட்டு.
குடும்பத்தோடு தியேட்டர்
போன போஸ்டர் பாத்துட்டு
திரும்பி வந்துடலாம்.


இருட்டாய் கிடந்த
ஏழைகளின் குடிசைகளை
வண்ண தொலைகாட்சிகளால்
மிளிர வைத்த
தமிழக அரசு,
இன்னும் ஒளி சேர்க்க
டி.வி.டி பிளேயர்
இலவசமாய் தர முன் வருமா?

ஆட்சியை பிடிக்க கவலையில்லை
கொடுத்த காசுக்கு
வஞ்சகமில்லாமல் 
ஓட்டு போட
நாட்டில் உண்டு
பல கோடி சத்திய சீலர்கள்.

அடுத்த தேர்தல்ல
ஐம்பது காசுக்கு
அரை கிலோ பருப்பு
வழங்கும் திட்டம் வந்தால் போதும்
ஒரு ரூபா அரிசி வாங்கி
சாதம் வடிச்சு
சாப்பிட
சாம்பாரும் ரெடி.

ஏழை எளியவர்கள் உட்பட
எல்லோருடைய வாழ்க்கையும்
செம்மையாக இருக்க,
தமிழ் மட்டும் தான் மிச்சமாய் இருந்தது.
அதற்கும்
மாநாடு நடத்தி
மகிழ்வித்தாயிற்று.

மானாட மயிலாட
பார்க்க முடியல
கரண்டு  அடிக்கடி கட்டாகி போகுது.
விலைவாசி எகிறி போச்சு.
மாசமாசம் குடும்பம் நடத்த
கடன் வாங்க
எது கட்டுபடியாகும்?
அதுக்கு 
ஆக்டோபசதான் கேட்கணும் 
கந்து வட்டியா? மீட்டர் வட்டியா?
இப்போ 
நமக்கு மட்டுமில்ல
தமிழ்நாட்டுக்கே ஏழரைதான்.

சகல விதமான
ஆசைகளும் நிறைவேறி
சுக போகமாய் வாழ்ந்திட
இறைவனை தேடி போய்
கும்பிட்டால்,
கடவுளுக்கே
கலைஞரின் பேரனாகதான்
ஆசையாம்!!!







Sep 3, 2010

ஹாய் கலைஞர் - கேள்வி பதில் பகுதி - 1

இது நகைச்சுவைக்காக மட்டுமே. யார் மனதையும் புண்படுத்துவதற்கு  இல்லை. (அப்பாடி தப்பிக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு.)




தமிழ்ல பிடித்த சில வார்த்தைகள்?

பாராட்டுகள், பத்திரங்கள். ( எல்லாமே பன்மைகளில் (more than one) இருந்தால் தான் விரும்புவீர்கள் போல.)

மிகவும் எளிதாக செய்ய முடியற காரியம்?

கடிதம் எழுதறது. (உங்க ஊரு தபால்காரருக்கு ஏகப்பட்ட வேலை. தண்ணியில்லா காடு மாதிரி, உங்க ஊரு போஸ்ட் மேன் ஆக வரவே எல்லோரும் பயந்து கிடப்பாங்க.)

அடுத்த தேர்தல்ல எல்லோருக்கும் இலவச டி.வி.டி பிளேயர் கொடுப்பிங்களா?

இல்லை. அத கொடுத்துட்டா நம்ம பேர புள்ளைக எடுக்கிற, நடிக்கற படத்தையெல்லாம் மக்கள் திருட்டு வி.சி.டி வாங்கி பார்த்துடுவாங்களே!. (நீங்க அறிவாலயத்துல இருக்கிறது கரெக்ட்டு தான்.)

திரைத் துறைக்கு இலவசமாக அரசு நிலங்கள் ஒதுக்கிய திட்டம் பற்றி?

எல்லாம் ஒரு முன்னோக்கிய பார்வை தான். (அது சரி. திரைத்துறையே இப்ப நம்மளோடதுதான.)

தொடர்ந்து திரைப்படங்களுக்கு வசனம் எழுத காரணம்?

என் வசனம் சிறப்பா இருக்கறதால தான். ( அதனால்தான்  சீக்கிரமாகவே சிறப்பு திரைப்  படமா கலைஞர் டிவில போட்டுடறாங்களா?)

அடுத்த டெல்லி பயணம்?

கூடிய சீக்கிரம். மக்களுக்காக. (யார் பெற்ற மக்களுக்கு? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.)

வரும் தேர்தலில் தி.மு.க வுக்கு ஓட்டு வாய்ப்புகள் எப்படி இருக்கு?

முதல்ல உன்னோட இந்த பதிவுக்கு எத்தனை ஓட்டு விழுதுன்னு பாரு. (மக்களே பார்த்து குத்துங்க. உங்களோட ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரு "இன்க் ரப்பர்" இலவசமாக வழங்க படும். இன்க் ரப்பர் எங்களுக்கு எதுக்குன்னு கேட்கறிங்களா? ஏதோ என்னால முடிஞ்சது. உங்க வீட்டு குழந்தைங்களுக்கு இல்ல பக்கத்துக்கு வீட்டு குழந்தைங்களுக்கு கொடுங்க.)


Aug 26, 2010

கூவம் நடுவர் நீதி மன்றம் - நாட்டுக்கு தேவையான செய்திகள்






"இந்தியர் தானா? என்று கேள்வி. ஆனந்திடம் கபில்சிபல் சமாதானம்


கபில்சிபல் : கவலை படாதிங்க! ஆனந்த். இந்த வருடம் NDTV - யோட இந்தியன் ஆப் தி இயர் அவார்ட் உங்களுக்கு தான்.


வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள். "செக்' வைக்க மத்திய அரசு அதிரடி திட்டம்

ஆமா, இனிமே நீங்க தான் 'செக்' வைக்கணும். இவ்வளவு நாளா இந்தியாவுக்காக 'செக்' வச்சுக்கிட்டு இருந்த விஸ்வநாத் ஆனந்தையும் இந்தியானான்னு கேட்டு காண்டு ஆக்கிட்டிங்க.


புதிய இன்ஜி., கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது : பொன்முடி


மிகவும் "பொன்"னான "முடி"வு.



மெகா சீரியலில் நடிக்கிறார் மதுபாலா


சின்ன சின்ன ஆசை. சின்னத் திரையில் சிறகடிக்க ஆசை.



மகளிருக்கு 50 சத "இட ஒதுக்கீடு": பெண்ணியம் மாநாட்டில் தீர்மானம்


என்னோட பைக்ல கூட 50 சதவிகிதம் உட்கார இடம் இருக்கு. யாராவது வர்றிங்களா?



இலங்கை தமிழர்கள் நிலையை நேரில் ஆராய, கிருஷ்ணா பயணம்

கர்நாடகால இருந்து கிருஷ்ணா நீரை கொஞ்சம் நல்லா திறந்து விட்டிங்கனா, இங்கு இருக்கிற தமிழர்களாவது நல்லா இருப்பாங்க. கிருஷ்ணா நடுவர் நீதி மன்றம், காவிரி நடுவர் நீதி மன்றம் இப்படின்னு ஒவ்வொரு ஆற்றுக்கும் ஒரு மன்றம் இருக்கும் போது, கூவம் நடுவர் நீதி மன்றம் ஏன் இல்ல?

கூவம் என்ன பாவம் செஞ்சது? 


போனிவர்மாவை மணந்தார் பிரகாஷ்ராஜ்

போனிவர்மா வந்த ராசி, இனியாவது தயாரிக்கிற எல்லா படமும் சூப்பரா போனி ஆகுமா?

இனிது இனிது - படத்துக்கு போனிவர்மா தான் டான்ஸ் மாஸ்டராம். பிரகாஷுக்கு இந்த திருமணமாவது (மறுமணம்) ஆட்டம் காணாமல் இருந்தால் சரி.