Aug 19, 2010

சனியன் பிக்சர்ஸ் - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

 
உங்களது தொடர்ந்த பேராதரவால் 50 பாலோவர்ஸ் தாண்டி இந்த வழிபோக்கனின் பயணம் தொடர்கின்றது. நன்றிகள் பல!!


என் பிரெண்டு ஒருத்தன் ரெண்டு மூணு வருசமா புல்லாங்குழல் கத்துகிட்டு வர்றான். எப்பவாவது வாசிக்க சொல்லி கேட்டா மட்டும் ஏதாவது காரணம் சொல்லி மழுப்பிடுவான். ஆனா ஒவ்வொரு தடவையும் நாங்க டிரைன்ல ஊருக்கு போகும் போது, எங்க தலையணைக்கு எல்லாம் காத்து ஊதி தர்றது அவன்தான். இத்தனை நாளா காசு கொடுத்து தனியா கிளாசுக்கு போனதுக்கு சனி, ஞாயிறு கிழமைகளில் மெரினா பீச்சுல ஒரு பலூன் கடை போட்டு, பலூன் ஊதி வித்து இருந்தா கூட நல்லா கலெக்சன் பார்த்து இருக்கலாம்.


காமன் வெல்த் விளையாட்டு போட்டி நடுத்துறதா சொல்லிட்டு மக்களோட காமன் வெல்த்துல நம்ம அரசியல்வாதிங்க பூந்து விளையாண்டுட்டாங்க. மணிசங்கர் ஐயர் இதை பெட்ரோல் கிணறு மாதிரி தோண்ட வச்சு தீயை பத்த வச்சுட்டாரு. இதே போட்டியில  எப்படியெல்லாம் அதிகமா ஊழல் பண்ணலாம்ன்னு ஒரு போட்டி வச்சாங்கன்னா, இந்தியாவுக்கு தான் தங்கம், வெள்ளி, பித்தளை மற்றும் ஈயம் மெடல் எல்லாமே. இதுல இந்த விளையாட்டுக்கு ரஹ்மான் பாட்டு மட்டும்தான் குறைச்சல்.


தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமா கன்னட சினிமா லெவலுக்கு முன்னேறிகிட்டு வருது. சில வருடமா சினிமால எவன் எவன் நடிக்கறதுன்னே ஒரு விவஸ்தை இல்லாம போச்சு. மலையாள, தமிழ் பிட்டு படத்துல வர்ற ஹீரோ கூட கொஞ்சம் நல்லா இருப்பாங்க. காசு அதிகமா இருந்துச்சுன்னா எவளை வேணும்னாலும் கூப்பிட்டு ஒரு ரூமுக்குள்ளையே என்ன வேணா பண்ணிக்கோங்க. எங்களை ஏன்டா தொந்தரவு பண்றீங்க "மிளகா"ய்ங்களா? உங்க கலை ஆர்வத்துக்கு ஒரு வரைமுறையே இல்லாம போச்சு. சரி படத்துல தான் நடிக்கிறிங்க. பாட்டையாவது விட்டு வைக்கலாம்ல. அதுலயும் வந்து இம்சை பண்றீங்க. டீவில ஒரு பாட்டு நிம்மதியா பார்க்க முடியல. பக்கமா ஒரு பாட்டு பார்த்தேன். ஹீரோவுக்கு பின்னாடி ஆடுற குரூப் டான்சர்ஸ் ஒவ்வொருத்தனும் பேரரசு படத்துல வர்ற வில்லனுங்க மாதிரியே இருக்கான்னுங்க. அதுல ஒருத்தன் தலை சொட்டை (ஹீரோவ அழகா காமிக்கணும் இல்ல). ரெண்டு மூணு படத்துல நடிச்சிட்டா மக்களுக்கு பார்த்து பார்த்து பழகி போய்டும். இதுதான் இவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையாக இருக்கலாம்.



சன் பிச்சர்ஸ் படம் வந்தாவே பயமா இருக்கு. எந்த சேனல் மாத்துனாலும் பத்து நிமிசத்துக்கு ஒவ்வொரு தடவ ட்ரைலர் போட்டு சாக அடிப்பாங்க. எந்திரன் வந்து மந்திரம் மாதிரி காதுல ஒலிச்சு நம்மள ஒழிக்க போகுது. இதிலிருந்து காப்பாற்ற சன் மூவீஸ் நிறுவனம் மக்களுக்குக்காக ஒரு வழி கொண்டு வந்து இருக்காங்க. உங்க வீட்டுல செட்ஆப் பாக்ஸ் இல்ல சன் டிஷ் இருந்துச்சுன்னா, தியேட்டர் போய் படம் பார்த்த டிக்கெட் நம்பர வச்சு அவங்களோட வெப் சைட்ல போய் ரெஜிஸ்டர் பண்ணிடிங்கின்னா, உங்க டீவில மட்டும் அந்த ட்ரைலர் வராது. உங்க வீட்டுல ஒருத்தர் மட்டும் படம் பார்த்திருந்தா பத்தாது. எல்லோரும் பார்த்து இருக்கணும். உங்க வீட்டுல சாகுற வயசுல தாத்தா பாட்டி இருந்தா, அவங்களையும் தூக்கிட்டு போயாவது படத்த காமிச்சுட்டு வந்துடனும் (எலேக்க்ஷனுக்கு ஓட்டு போட தூக்கிட்டு போற மாதிரி). அதுக்கு உங்க ரேசன் கார்டையும் ஸ்கேன் பண்ணி அந்த சைட்ல அப்லோட் பண்ணிடனும் (சரி பார்க்கறதுக்கு).

எப்பூடி? (இதை எல்லாம் படிச்சிட்டு நம்பவா போறீங்க?)


இலங்கை போட்ட ஒரு சப்ப நோ பால் மேட்டருக்கு (குண்டு போட்டத எல்லாம் விட்டுருவானுங்க) ஏதோ நோபல் பரிசு குடுக்காம ஏமாத்துன மாதிரி நம்ம ஆளுங்க பண்ற பிரச்சனை ஐயோ!! தாங்க முடியல. மத்த மதத்தை விட கிரிக்கெட்ங்கற மதம் தான் நாட்டை அதிகமா சீரழிச்சுக் கிட்டு இருக்கு. இதை எல்லாம் கண்டுக்காம இருக்க நாமலே நம்மள நாடு கடத்திகிட்டா தான் ஆச்சு.





Aug 18, 2010

My Little Bride - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)



நான் முதன் முதலாக முழுமையாக பார்த்த கொரியன் படம் இது தான். இதற்கு முன் My wife is a Gangster படத்த HBO வில் கொஞ்சம் பார்த்த அனுபவம். ஆனால் My Little Bride பார்த்த பிறகு எனக்கு கொரியன் படங்களின் மேல் கன்னாபின்னா காதல் வந்துவிட்டது.

தினமும் ஒரு கொரியன் படம் டவுன்லோட் பண்ணி பைத்தியம் மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டேன். எங்க வீட்டுக்கு யாராவது பிரெண்ட்ஸ் வந்தால்  கூட, சாப்பாடு சாப்பிடறாங்களோ இல்லையோ ஒரு கொரியன் படம் பார்க்காமல் வெளிய போக முடியாது (என்னோட பதிவுக்கு ஓட்டு போடாமலும் வெளிய போக முடியாது).

கூட இருக்கின்ற பிரெண்ட்ஸ்ங்க எல்லாம் என்னுடன் சேர்ந்து கொரியன் மொழி பேச ஆரம்பிச்சுட்டாங்க. கம்பெனியில் என்னை ஆன் சைட்டுக்கு அனுப்புவதாக சொல்லியபோது கூட தென் கொரியாவாக இருந்தால் தான் போவேன் என்று அடம் பிடிச்சிருக்கேன்.

கடந்த புட்பால் உலக கோப்பை மேட்சில் என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் அர்ஜென்டினா, பிரேசில் அப்படின்னு சப்போர்ட் பண்ணி கொண்டிருக்க, நான் தென் கொரியா டீமுக்கு தான் சப்போர்ட் செய்தேன்.


ரொமாண்டிக் காமெடி சினிமாவில் கொரியன்ஸ் படத்தை அடிச்சுக்க முடியாது. கொரியன் படங்கள பார்க்கும் போது கொஞ்சம் தமிழ் படம் பார்க்கிற உணர்வு வரும் (கேவலமாக இருக்கும் என்று தப்பாக நினைத்து விட வேண்டாம்).

  • குடும்ப உறவுகளுக்கு உள்ள பாசம்,
  • காதல்ல உருகி செத்து சுண்ணாம்பு ஆகறது,
  • உப்பு மூட்டை தூக்கிட்டு போறது.
  • காதலியோ காதலோனோ இறந்து விட்டால் பீல் பண்ணி சாகறது
என்று தமிழ் சினிமாவுக்கான அத்தனை அம்சங்களும் இருக்கும்.

இந்த படம் பார்த்தால் உங்களுக்கு புரியும். கொரியன் மொழில 500 தமிழ் வார்த்தைகள் இருக்கிறதாம். செம்மொழி மாநாட்டில் யாரோ சொன்னதாக தகவல். அம்மா அப்பாவை அவர்களும் "அம்மா" "அப்பா" என்று தான் சொல்கிறார்கள். தாத்தாவை, அப்புச்சி என்றே சொல்கிறார்கள்.

இதனால் நம் தமிழ் இயக்குனர்கள் கொரியன் படத்தை டவுன்லோட் பண்ணி கதை உருவாக்குறாங்க. அப்படி நம்ம மோதி விளையாடு இயக்குனர் சரண், 100 days with Mr Arrogant என்ற படத்துல இருந்து தான் ரொமாண்டிக் சீன்களை சுட்டு தன்னோட மூளைய யூஸ் பண்ணி "மோதி விளையாடு" என்ற ஒரு மாபெரும் காவியத்தை படைத்துள்ளார்.

அட என்னமா யோசிச்சிருக்கு பய புள்ள!! அந்த படத்தை நம்ம ரீமேக் புகழ் ராஜா மாதிரி அப்படியே எடுத்து இருந்தால் கூட ஓரளவு ஓடி இருக்கும். இதெல்லாம் பார்க்கும் போது தான் நாம ஏன் டைரக்டர் ஆக கூடாது? என்று ஆபிஸ்ல Blog படிச்சுகிட்டே யோசிக்கிறேன். (ஆபிஸ்ல வேலையே செய்யறதே இல்லையா? என்றெல்லாம் இடையில் கேட்க கூடாது. அப்புறம் கதையில் Flow விட்டு போய்டும்). சரி சரண் சாரோட இன்னொரு நாளைக்கு மோதி விளையாடலாம்.

அப்படி இன்னொரு சொதப்பல் தான் "சிக்கு புக்கு".




படம் பார்க்கணும்ன்னு நினைக்கறவங்க, இதை படிக்கறதை நிறுத்திட்டு அப்படியே பேக்அப் பண்ணிகோங்க.

இனி, இந்த படத்தோட கதைக்கு போவோம். நாயகி Boeun ஸ்கூல் படிக்கிற பொண்ணு. இவங்களோட உண்மையான பேரு Moon Geun Young. உண்மையாகவே அந்த நிலா மாதிரி அவ்வளவு அழகு. (என்னை பொறுத்த வரைக்கும் அழகான பொண்ணுங்க எது பண்ணினாலும் அழகாதான் இருக்கும். கொட்டாவி விடும் போது கூட).

நாயகன் Sangmin காலேஜ் பைனல் இயர். இவங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ஒன்னா வளர்ந்தவங்க. நிலாவுட (நாயகி) தாத்தா நாயகனின் தாத்தாவுக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தின் படி அவங்க வீட்டில் இரண்டு பேரின் விருப்பம் இல்லாமலே கல்யாணம் செய்து வைத்து விடுகிறார்கள். நிலாவின் அம்மாவிற்கும் இதில் சுத்தமா இஷ்டம் இல்லை.

கல்யாணம் முடிந்து இரண்டு பேரும் தனி குடித்தனம் போய், நிலா பள்ளிக்கூடத்துக்கும், நாயகன் கல்லூரிக்கும் போகிறார்கள். நிலாவுக்கு அவங்க ஸ்கூலில் படிக்கிற ஒரு பேஸ்பால் பிளேயர் மேல் காதல். அந்த பேஸ்பால் பிளேயர் மீது நிறைய பொண்ணுங்களுக்கு காதல். நிலாவோட நெருங்கிய தோழிக்கும்.

இதற்கு இடையே நாயகன் தன்னோட காலேஜ் internship-க்காக நிலாவின் ஸ்கூலுக்கு ஓவிய டீச்சராக வர, அங்கே இருக்கிற ஒரு லேடி டீச்சர்க்கு நாயகன் மேல ஒரு "இது" வருது. கடைசியில் நிலாவுக்கு எப்படி நாயகன் மேல் காதல் வந்து சுபம் போடறாங்க என்பதுதான் கதை.

படத்துல ஒவ்வொரு கதா பாத்திரமும் அவ்வளவு அருமையாக  நடித்திருக்கிறார்கள். படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை சிரிச்சுகிட்டே இருக்க வேண்டியதுதான் உங்கள் வேலை.

படத்தில் வரும் சுவாரஸ்யங்கள் சில.
  • நாயகனை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க அவரோட அப்பா, தண்ணி அடிச்சிட்டு கார் கண்ணாடியை உடைக்கிறது.
  • நிலா ஹனிமூனுக்கு போகாமல் எஸ்கேப் ஆகி அவங்க வீட்டுக்கு முன்னால வந்து நின்று கொண்டிருக்கும் போது நாயகன் வந்து நிலாவோட கழுத்துல கைய வச்சு இழுத்துட்டு போறது.
  • நிலாவோட அம்மா சின்ன பெண்ணான நிலாவை நினைச்சு அடிக்கடி புலம்பிகிட்டே இருக்கறது.
  • நாயகனும் நிலாவும் வீட்டில் சமைச்சு சாப்பிட்டு விட்டு, அந்த பாத்திரத்த கழுவுவதற்கு நம்ம ஊரில் "சாட் பூட் த்ரீ" போல ஒன்றை சொல்லி நாயகன் நிலாவை மாட்ட வைப்பது.
  • நாயகன் அவர் பிரெண்ட்ஸ் கூட பாரில் இருக்கும் போது நிலாவுக்கு கால் பண்ணி அதட்டி அங்க வர சொல்லி கலாய்கிறது.
  • நிலா கண்ணாடிய பார்த்து ஒரு எக்ஸ்பிரஸ்சன் கொடுப்பாங்க பாருங்க. You would love it.(கீழ இருக்கிற வீடியோவில் வரும் பாருங்க.)
  • நிலாவுக்கு loft sided butt ன்னு அவ தம்பி ஓட்டறது. நாயகன் நிலாவை உப்பு மூட்டை தூக்கிட்டு போகும் போது butt ஒரு பக்கமாக இழுக்குதுன்னு கலாய்ப்பது. கடைசியாக நிலாவோட தம்பிக்கு loft sided ball ன்னு அவனோட காதலி கழட்டி விட்டுட்டான்னு அவன் அழறது.
  • நிலா ஒரு பாரில் கரோக்கே (karaoke) பாட்டுக்கு ஆடுவது படு சூப்பர். வரிகளை கவனித்து பார்த்தால் அருமையாக இருக்கும். இந்த பாட்டுதான் என்னோட தற்போதைய ரிங்டோன்.
  
                                



இந்த படத்தை எல்லோரும் பார்த்து விட்டு பைத்தியம் பிடித்து கொரியன் படங்களை தேடி தேடி அலைய வாழ்த்துக்கள்.

இந்த படத்தின் டோர்ரென்ட் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்.

நமீதா டச்: My Little Bride, Celebrate her.




Aug 9, 2010

முட்டைகள் தட்டுப்பாடு - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

ஆபாயிலுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகறதால், கோழிகளே திக்கு முக்காடி போய் முட்டைகள் அதிகமாக போட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளன. ஆபாயிலின் அதீத வரவேற்பால் இந்த மாதம் முட்டைகளின் தட்டுப்பாடு மிகப்பெரும் அளவில் ஏற்பட்டுள்ளதாக கோழி பண்ணை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு கோழிகள் அதிக முட்டைகள் இட தவறும் பட்சத்தில், சுகுணா சிக்கன் சென்டருக்கு அனுப்பப்படும் என்றும் கோழிகளுக்கு எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.



ப்பவெல்லாம் என்னதான் ஆல்-அவுட், மார்டின் யூஸ் பண்ணுனா கூட, இந்த கொசுவெல்லாம் சாகறதில்ல. அதனால மக்கள் நூறு, நூத்தம்பது ரூபான்னு போட்டு கொசு அடிக்கற பேட் தான் வாங்குறாங்க. மார்கெட்லயும் ஏகப்பட்ட பேட்கள் விதவிதமா விற்குது. டீவில கூட தற்போது மஸ்கிட்டோ காயில், லிக்விட் விளம்பரம் போடுறத அதிகமா பார்க்க முடியறதில்ல. ஒருவேளை அவங்களே பேட் தான் யூஸ் பண்றாங்களோ என்னவோ?

அதுவும் டப்பு டப்புன்னு சவுண்டோட, கொசு சாகுறதும் கண்ணுக்கு தெரியறதனால சின்ன பசங்க எல்லாம் (சில சமயம் பெரியவங்க கூட) சந்தோசமா தீபாவளிக்கு கொல்லு பட்டாசு வெடிக்கற மாதிரி அடிச்சு பட்டையக் கிளப்புறாங்க (வேட்டை ஆரம்பம் ஆயிடுச்சு டோய்... ). தற்போது சென்னைல இருக்கிற வீட்டுல எல்லாம் செட்டில் கார்க் பேட் இருக்கோ இல்லையோ ஆனா இத வச்சு இருக்காங்க. அதனால இந்த பேட் தயாரிக்கிற கம்பனிகள் டெண்டுல்கர வச்சு, அவரு அந்த பேட்ட யூஸ் பண்ணி கொசு அடிச்சு கொல்ற மாதிரி விளம்பரம் எடுத்தா, பேட் வியாபாரம் இன்னும் பிச்சுகிட்டு ஓடும்.




ர்செல் கஸ்டமர் கேர்ல இருந்து போன் பண்ணி,

"சார், உங்க செல் போன் சுவிட்ச் ஆப் ஆன போது ஏதாவது கால் வந்துச்சுனா அதை பத்தி உடனே உங்களுக்கு மெசேஜ் அனுப்பற மாதிரி வசதி இப்ப புதுசா கொண்டு வந்து இருக்கோம். யூஸ் பண்ணி பார்க்கறிங்களா?" என்று கேட்டார்கள்.

எனக்கெல்லாம் செல் ஆன் பண்ணி வச்சு இருக்கும் போதே எந்த காலும் வர மாட்டேங்குது (பெண்கள் கவனிக்கவும்). இதுல ஆப் பண்ணி வச்சு இருக்கும்போது பத்தி பேசறான் பிக்காலி பய!. சரி, அதுக்கு எவ்வளவுன்னு கேட்டா மெசேஜ் கட்டர் மாதிரி ஒரு நாளைக்கு ஒரு ரூபாயாம். மாசம் முப்பது ரூபா. ஏன்டா தினமும் யாருக்காவது செல் போன் ஆப் ஆகுமா? கொள்ளை அடிக்கறதில்ல ஒரு நியாயம் தர்மம் வேண்டாமா?

ற்போது வலை உலகத்துல காம்படீஷன் அதிகமாயிடுச்சு. தற்போது அட்டு படத்த பார்த்து விமர்சனம் எழுதி கொண்டிருந்த நம் பதிவர்கள் இப்போ பிட்டு படத்தையும் போட்டி போட்டுக்கிட்டு பார்த்து அலசி ஆராய்ந்து விமர்சனம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நாமளும் தாக்கு பிடிக்கணும்னா சின்ன வயசுல பார்த்தத கண்டின்யூ பண்ணனும் போல. என்னை மறுபடியும் தியேட்டர் போய் பிட்டு படம் பார்க்க வச்சுடாதிங்கப்பா! (நான் திருந்தி ரொம்ப வருஷம் ஆச்சு!!!)

நான் கடைசியா பார்த்த அட்டு படம் பானா காத்தாடி. சத்யம் தியேட்டர்ல மதராச பட்டணம் படத்தோட இண்டர்வெல்ல போட்ட டிரைலர பார்த்து ஓரளவுக்காவது இருக்கும்ன்னு நம்பி போன படம்.  படம் ஓரளவுக்கு சுமாரா இருந்திருந்தால் நமீதா விமர்சனமா போட்டிருக்கலாம். பானா காத்தாடினா என்னன்னு பட்டம் விடற பசங்களுக்கு மட்டுமே தெரியலாம். படத்துல அந்த பானா காத்தாடிய பார்த்து ஏதோ அலாவுதினோட அற்புத விளக்கு ரேஞ்சுக்கு சீன் விடறானுங்க. படத்தில இருந்த ஒரு நல்ல விஷயம் கதாநாயகி நல்லா கும்முன்னு இருந்தாங்க. சாதரணமாக பாட்டுக்கு மட்டும் வெளிய எந்திருச்சு போய் தம் அடிக்கிற மக்கள், படம் ஓடி கொண்டிருக்கும் போதே கிளம்பிடறாங்க (நானும் இது மாதிரி வெளிய எந்திரிச்சு போகுறதுக்காகவே தம் அடிக்க கத்துக்கணும் போல). இன்டர்வெல்லுக்கு முன்னாடி வந்த டிவிஸ்டு பார்த்து அதிர்ச்சியாகி பாதியிலே வெளிய வந்துட்டேன். படு சினிமாத்தனம்.

ந்திரன் படத்த பத்தியோ இல்ல பாட்ட பத்தியோ ஏதாவது ஒரு போஸ்ட் போட்டா தான் மத்தவங்களும் நம்மள பதிவர்ன்னு மதிப்பாங்க போல. படம் சிவாஜி அளவுக்கு கொடுமையா இருக்காதுங்கறது மட்டும் என் நம்பிக்கை. முதலும் கடைசியுமா ரஜினி கூட (61) இவ்வளவு வயசு அதிகமா ஒரு கதாநாயகியா நடிக்கறது ஐஸ்வர்யா ராயாத்தான்(37) இருக்கும். எந்திரன் வெளியாகும் போதும் பிட்டு படத்துக்கு கூட தியேட்டர் கிடைக்கறது ரொம்ப கஷ்டம்.




Aug 6, 2010

உயிர் எழுத்துக்களை மெய்யாக்கினாய்.



ழகழகாய் மையிட்டு
யிரமாயிரமாய் கவிதைகள் எழுதுகின்றன கண்கள்.

தழுக்கு தீட்டும் சாயங்களில்
ர்க்கவில்லை வானவில் நிறங்கள்.

தடு சொட்டும் தேன் துளிக்கு
ர்வலமாய் எறும்பு கூட்டங்கள்.

டுத்துரைக்க எத்தனையோ!
ற்ற இறக்கங்கள் கச்சிதமாய்.

ம்புலனும் உன் வசம்தான், என்னை அடிமையாகவே மாற்றிவிட்டாய்

ப்பிட்டு கொள்ளவே திரணியில்லை
ரமாய் நின்று பூக்கும் மலர் செடிகள்.

ஒளவியம் கொள்ள வைக்கும் பேரழகு            (ஒளவியம் - பொறாமை)
றிணையாய் மாறி போக வைக்கும் எவரையும்.



Aug 4, 2010

பிறந்த நாள் பரிசு



காதலியின்
பிறந்த நாளுக்கு பரிசளிக்க
அழகிய ஆடை தேடி
கடை முழுதும் பார்வையிட்டேன்.

பொம்மைகள் அணிந்த
ஆடைகளே மனதை லயிக்க
வேறு வழியில்லாமல்
நிர்வாணப் படுத்தினேன்
இரண்டு மூன்று
பொம்மைகளை.

அன்று இரவு
அவளையும்.