Aug 26, 2010

கூவம் நடுவர் நீதி மன்றம் - நாட்டுக்கு தேவையான செய்திகள்






"இந்தியர் தானா? என்று கேள்வி. ஆனந்திடம் கபில்சிபல் சமாதானம்


கபில்சிபல் : கவலை படாதிங்க! ஆனந்த். இந்த வருடம் NDTV - யோட இந்தியன் ஆப் தி இயர் அவார்ட் உங்களுக்கு தான்.


வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள். "செக்' வைக்க மத்திய அரசு அதிரடி திட்டம்

ஆமா, இனிமே நீங்க தான் 'செக்' வைக்கணும். இவ்வளவு நாளா இந்தியாவுக்காக 'செக்' வச்சுக்கிட்டு இருந்த விஸ்வநாத் ஆனந்தையும் இந்தியானான்னு கேட்டு காண்டு ஆக்கிட்டிங்க.


புதிய இன்ஜி., கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது : பொன்முடி


மிகவும் "பொன்"னான "முடி"வு.



மெகா சீரியலில் நடிக்கிறார் மதுபாலா


சின்ன சின்ன ஆசை. சின்னத் திரையில் சிறகடிக்க ஆசை.



மகளிருக்கு 50 சத "இட ஒதுக்கீடு": பெண்ணியம் மாநாட்டில் தீர்மானம்


என்னோட பைக்ல கூட 50 சதவிகிதம் உட்கார இடம் இருக்கு. யாராவது வர்றிங்களா?



இலங்கை தமிழர்கள் நிலையை நேரில் ஆராய, கிருஷ்ணா பயணம்

கர்நாடகால இருந்து கிருஷ்ணா நீரை கொஞ்சம் நல்லா திறந்து விட்டிங்கனா, இங்கு இருக்கிற தமிழர்களாவது நல்லா இருப்பாங்க. கிருஷ்ணா நடுவர் நீதி மன்றம், காவிரி நடுவர் நீதி மன்றம் இப்படின்னு ஒவ்வொரு ஆற்றுக்கும் ஒரு மன்றம் இருக்கும் போது, கூவம் நடுவர் நீதி மன்றம் ஏன் இல்ல?

கூவம் என்ன பாவம் செஞ்சது? 


போனிவர்மாவை மணந்தார் பிரகாஷ்ராஜ்

போனிவர்மா வந்த ராசி, இனியாவது தயாரிக்கிற எல்லா படமும் சூப்பரா போனி ஆகுமா?

இனிது இனிது - படத்துக்கு போனிவர்மா தான் டான்ஸ் மாஸ்டராம். பிரகாஷுக்கு இந்த திருமணமாவது (மறுமணம்) ஆட்டம் காணாமல் இருந்தால் சரி.





Aug 25, 2010

அனிச்சை செயல்




உன்னை பார்த்த உடனேயே
ஆரம்பித்துவிடுகின்றன,
எனது அங்கங்கள்
தங்களை அழகாய் காட்டிக் கொள்வதற்கு.




Aug 24, 2010

நாட்டுக்கு தேவையான செய்திகள் ( Strictly 18+ )






"கறுப்பு" பணம் வாங்குகிறார் விஜயகாந்த்: கருணாநிதி.

புரிஞ்சிகோங்கப்பா! இவரு கருப்பு எம்.ஜி.ஆர்.



மனைவியை விவகாரத்து செய்தார் டைகர் உட்ஸ்  

இத்தனை நாளா குழியில Ball-ல மட்டும் தள்ளிகிட்டு இருந்தவரு, இப்ப ஸ்டிக்க (Stick) விட்டதனால வந்த பிரச்சனை...

Tiger wood back to Bachelorhood.



ஈரான் ஆயுதபலம் : அமெரிக்கா கவலை

பிரச்சனை ஆயுதபலமா? இல்ல ஆயில்பலமா



கண் தானம் செய்தார் ஐஸ்வர்யா ராய்! 

ஐஸுக்கு Eyesவர்யம் உண்டாகட்டும்.



முல்லை பெரியாறு அணையை பார்வையிடுவது எப்போது?அடுத்த கூட்டத்தில் தேதி முடிவாகும்

இவங்கள விடுங்க. என்னை எப்போது முல்லை பார்வையிட்டு, பின் நான் அவளை அணைக்க?



எம்.பி.,க்களுக்கு மாத அலவன்ஸ் மேலும் உயர்வு : வரியும் கட்ட வேண்டாம் என மத்திய அரசு முடிவு

எம்பிக்கள் எம்பி எம்பி குதிச்சு போராடுனதுக்கு, நல்லா கை மேல பலன். இனி எம்பிக்களின் குடும்பங்கள் பசி, பட்டினியில் வாடாது. மக்களுக்காகவும் இனி சந்தோசமாக தொண்டு ஆற்றுவார்கள்.



முதல்வருடனான சந்திப்பு ஜெயலலிதா புறக்கணிப்பு

புறக்கணிப்பு ஜெயலலிதாவின் 'உடன்பிறப்பு'.







Aug 23, 2010

எறிங்க, நீங்களும் ஹீரோ ஆகலாம்... (நாட்டுக்கு தேவையான செய்திகள் )

இது நகைச்சுவைக்காக மட்டுமே. இது யார் மனதையும் புண்படுத்துவதற்கு  இல்லை.


 



முதல்வர் மீது ஷு வீசியவர் காஸ்மீரின் திடீர் 'ஹீரோ'.
 
ஏதாவது ஒரு கட்சி கூட்டத்துக்கு போய், கால்ல போட்டு இருக்கிற ஷுவ கழட்டி யாராவது பெரிய அரசியல்வாதி மேல, மலிங்கா மாதிரி எறியுங்க. மேல படனும்னு அவசியம் இல்ல. ஆனா கண்டிப்பா உங்க மேல ஏகப்பட்ட அடிகள் எக்கச்சக்கமா படும்.



மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் - பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது.

ஏம்பா? கவர்மென்ட் இன்னும் approve பண்ணலைனா கூட, அவரே முன்வந்து பீஸ் வாங்காம  இலவச செக்ஸ் கல்வி சொல்லிதர முன் வந்து இருக்காரு. அத தப்பா சொல்றிங்களே?................ நல்ல உடற் 'கலவி' ஆசிரியர்.


  
காதலி சுனந்தாவை கேரள முறையில் மணந்தார் சசிதரூர்.

என்ன ஒரு மாநில பற்று....ஒரு விஷயம், இவங்க மனசு ஒத்து போய் கல்யாணம் பண்ணினாங்களோ இல்லையோ, ஆனா இது ரெண்டு பேருக்கும் மூணாவது கல்யாணம் அப்படிங்கறது நல்லாவே ஒத்து போகுது.



"சின்ன வீடு" பிள்ளைகளுக்கும் பரம்பரை சொத்தில் பங்கு : சுப்ரீம் கோர்ட் நெத்தியடி.

இனி சின்ன வீடு வச்சு இருக்க ஆம்பளைங்க எல்லாம் பாதுகாப்பா பண்ணுங்க. சின்ன வீடா இருக்கவங்க எல்லாம் "பாதுகாப்ப"  தூக்கி பக்கத்துல போட்டுட்டு பண்ணுங்க.




"கலைஞர் பேரன்" என நடித்து மோசடி சிக்கியவரை காவலில் எடுக்க முடிவு

எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க. போலீஸ், டாக்டர், வருமான வரி துறை அதிகாரி, இப்ப முதல்வர் பேரன். இதுவும் ஒரு துறை போலவே ஆகிடுச்சு. யாருக்கும் கணக்கு தெரியாதுன்னு கரெக்டா தான் யோசிச்சிருக்கு பயபுள்ள. அதுவும் புத்திசாலிதனமா சினிமா தயாரிக்கிறேன்னு வேற சொல்லி ஏமாத்தியிருக்கு. ஆனா பாவம்!!! எப்படியோ மாட்டிகிச்சு.




மதுரை வந்தது காமன்வெல்த் கண்காட்சி ரயில்

எண்ணி பாத்திங்களா? எல்லா பெட்டியும் கரெக்டா வந்துச்சா?......








Aug 22, 2010

நடிகர்கள் வலைப்பூ - Wiki Pedia விவரங்கள் பகுதி 1

இந்த பதிவு முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே. இது யார் மனதையும் புண்படுத்துவதற்கு  இல்லை. (அப்பாடி, இனி என்ன வேணா எழுதலாம்.)




வலைப்பூ பெயர்: போக்கிரி.
கேப்சன் : ஒரு தடவ நான் பதிவு போட்டா, அப்புறம் என் பதிவ நானே படிக்க மாட்டேன். (அப்புறம் மக்கள் எப்படி படிக்கறது?)

ஆரம்பத்துல தன் அப்பாவோடு சேர்ந்து அஜால் குஜால் படங்களை பதிவா போட்டு வலைப்பூவ ஓட்டிகிட்டு இருந்தார். அப்புறம் கொஞ்ச நாள் நடுவுல கொஞ்சம் சுமாரான பதிவா போட்டு தனக்கென்று ஒரு அடிப்பொடிகள் வட்டத்த உருவாக்கிக்கொண்டார். வாழ்க்கை ஒரு வட்டம்னு அவரு அடிக்கடி சொல்லுவாரு. இப்ப அவராலேயே அந்த வட்டத்தை விட்டு வெளிய வரமுடியல.

அவரு போடுற மொக்க பதிவுக்கு, எந்த வோட்டும் பின்னூட்டமும் வரலீனா, அவரும் அவங்க அப்பாவும் சேர்ந்து வெவ்வேற ஐ.டி கிரியேட் பண்ணி வேணுங்கற அளவுக்கு நூறோ இல்ல இருநூறோ பின்னூட்டம் போட்டுக்குவாங்க. அதுக்கு "நூறு பின்னூட்டம் அள்ளி தந்த ரசிகர்களுக்கு நன்றி" அப்படின்னு ப்ளாக்ல பேனரும் ஓட விடுவாங்க.
தொடர்ந்து எந்த மொக்க பதிவுமே ஹிட் ஆகலைனா, தெலுங்கு வலைப்பூ படிச்சு அதுல இருக்கிற நல்ல பதிவு எடுத்து மொழி மாற்றம் செஞ்சு அப்படியே தன் பதிவா போட்டு பொழப்ப ஓட்டுறதையெ ஒரு பொழப்பா வச்சு இருக்கார்.





வலைப்பூ பெயர்: தல.
கேப்சன் : தல மட்டும் தான் ஆடனும் இடுப்பு ஆட கூடாது. (அது!)

காதல் கதைகள், கவிதைகள்ன்னு எழுதி எல்லோருடைய பின்னூட்டத்தையும் கவர்ந்தவர். பின்னாளில் ரவுடி ஆக முயற்சி பண்ணி இருக்கிற பாலோவர்சையும் கொஞ்சம் கொஞ்சமா இழந்தார். சில சமயம் சின்ன பதிவா போடுறதும் சில சமயம் ரொம்ப பெருசா பதிவ போட்டும் படிக்கும் மக்களை நிலை குலைய வைப்பார்.
அப்புறம் பதிவு எழுதறதுக்கு நடுவுல அடிக்கடி கம்ப்யூட்டர்ல NFS கார் கேம் விளையாடறது இவருக்கு பொழுது போக்கான விஷயம்.

இவர் "சூப்பர் பதிவரோட" பதிவ எடுத்து அதுல இருக்கற கதா பாத்திரம் பேர மட்டும் மாத்தி தன்னோட பதிவா போட்டு ஹிட் பண்ணுவாரு. இவரு எதை எழுதினாலும் "கலக்கிட்டிங்க தல, அசத்திட்டிங்க தல" அப்படின்னு பின்னூட்டம் போடுறதுக்குன்னே ஒரு பெரிய கூட்டம் இருக்கு.  வீட்டுல இருந்தா கூட கோட் போட்டு டை கட்டிக்கிட்டு தான் பதிவு எழுதவே உட்காருவாரு. (கோட்டு போட்டா தான் பதிவு எல்லாம் ஹிட் ஆவுதுன்னு இவருக்கு ஒரு நம்பிக்கை).




வலைப்பூ பெயர்: கஜா என்கிற கஜேந்திரன்.
கேப்சன் : கரண்ட்டு அடிச்சு கூட தப்பிச்சவன் இருக்கான். ஆனா இந்த கஜேந்திரன் பதிவ படிச்சு உயிர் பொழைச்சவன் எவனும் இல்ல. (படிப்பீங்க?)

பதிவுகள் மூலமாக பல புரட்சிகரமான சிந்தனைகளை மக்களுக்குள் விதைச்சு அறுவடை பண்ணியவர். பதிவ எழுதும் போது கூட பல்ல கடிச்சுகிட்டு தான் எழுதுவாரு. நாட்டுல நடக்கிற அந்நியாயங்களுக்கு எதிராக பேனால சிவப்பு இன்க்(ink) தெறிக்க தெறிக்க எழுதுவாரு. இவருக்கு சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் மனப்பாடம் செஞ்சு வச்சு இருக்கிற திருக்குறள் இது ஒன்னு தான்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

இவரோட காஷ்மீர் தீவிரவாதம், நக்சலைட்டுகள் பற்றிய கட்டுரைகளை படித்து குறிப்பு எடுத்து தான் இந்திய அரசே நிறைய தீவிரவாதிகளை வளைச்சு புடிச்சிருக்கு. இவருக்கு அனானியா வந்து பின்னூட்டம் போட்டவங்களை எல்லாம் தன்னோட பதிவுல புரட்டி புரட்டி எடுப்பாரு. இவருக்கு ஆங்கிலத்துல புடிக்காத ரெண்டே வார்த்தை "மைனஸ் வோட்". மிகவும் சொற்ப ஓட்டுகளே கிடைத்து வந்தாலும் தற்போது தொடர்ந்து அரசியல் பதிவே அதிகம் எழுதி வருகிறார். இவர எல்லோரும் கேப்டன் கேப்டன்னு தான் கூப்பிடமுன்னு சொல்லுவாரு.( உபயம்: பசங்க படம்.)


டிஸ்கி : இதற்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து அடுத்த பகுதி வெளி வரும்.