Nov 16, 2010

என் தூரத்து காதலி



அழகான ஆண்களே
உன் அருகில் நிற்கத் தயங்கி
தள்ளி நிற்க,
பல அடி தூரத்தில் நான்.

தூரத்தில் இருந்தாலும்   
குறி தவறாமல்
உன் கண்கள் நடத்தும்
இரட்டை ஏவுகணை தாக்குதல்.

விலகவும் முடியவில்லை
நெருங்கவும் திரணியில்லை 
சிக்கித் தவிக்கிறேன்
தப்ப முடியாத  மாய வலையில்.



Nov 14, 2010

ஒபாமா, அஜீத், த்ரிஷா - மினி ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க) 14 Nov 2010

ஆபாயிலே சின்னதாத்தான் இருக்கும் இதுல என்ன மினி ஆபாயில் அப்படின்னு கேள்வி கேட்காம படிங்க. ஏன்னா, இருக்கறதே அவ்வளவு தான்.



ஒபாமா புயல் இந்தியாவில் மூன்று நாட்களாக மையம் கொண்டுவிட்டு இந்தோனேசியாவில் கரை ஒதுங்கி விட்டது. இனி துரத்தி அடிக்கப்பட்ட பிச்சைகாரர்கள் நிம்மதியாக மீண்டும் தலைநகர் திரும்புவார்கள். அவர் இந்தியாவுக்கு வந்த நாள்ல இருந்து நியூஸ் பேப்பர், டீ.வி எதுல பார்த்தாலும் ஒரே  ஒபாமா மந்திரம் தான். அவர் ஒன்னுக்கு போனத தவிர்த்து எல்லாமே நியூஸ் ஆக வந்திடுச்சு. ஓம் ஒபாமா யாம நமக.


இந்த புயலுக்கேலாம் எவன் பேரு வெக்கறான்? 'ஜல்'லு ஜில்லுன்னு சூப்பரா வெக்கராங்கப்பா. பொறந்து அஞ்சு மாசம் ஆன என் தங்கச்சி பையனுக்கு பேரு செலக்ட் பண்ண முடியாம என் மாமா ரொம்ப கஷ்ட படுறாரு. இவனுங்க பேஸ்புக் அட்ரஸ் அல்லது போன் நம்பர் உங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன். கொஞ்சம் கஷ்டப் பட்டாதான் நல்ல பேரு வாங்கமுடியும். அது மாதிரி நல்ல பேரு வைக்கறதுக்கும் கொஞ்சம் கஷ்டப் படனும் போல.





Strictly no moves...

 



Nov 2, 2010

ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க) - தீபாவளி ஸ்பெஷல் 18+



போனவாரம் ஞாயிற்று கிழமை வாரமலர் நடுப்பக்க செய்தியை புரட்டி பார்த்த என்னை அப்படியே கீழே புரட்டி போட்டது அந்த துணுக்கு. நம்ம தலைவி நமீதா "இ.பி.கோ., 376" என்ற படத்தின் மூலமாக புலன் ஆய்வு செய்யும் கடமை மற்றும் "உடை"மை தவறாத  ஸ்ட்ரிக்ட் ஆன சி.ஐ.டி போலீஸாக நடிக்கிறாராம். இதற்காக தனது பெருத்த உடற்கட்டை சீக்கிரம் குறைக்க பில்லாவிடம் ஐடியா கேட்டுவருகிறாராம். இதை தயாரிப்பது டூயட் மூவிஸ் தான் என்றாலும் இதில் நமீதாவுக்கு டூயட் ஏதும் இல்லையாம்.



மக்கள் எல்லோருக்கும் தீபாவளி வரப்போகுது அப்படிங்கறத விட  எந்திரன் படம் முக்கால் வாசி(?) தியேட்டர விட்டு போக போகுது அப்படிங்கரதுதல தான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். இருந்தாலும் வரலாற்று படமான இப்படத்தை பார்த்து ஜென்ம சாப விமோசனம் அடைந்து விடுங்கள் அல்லது அவர்கள் விமோசனம் கொடுத்து விடுவார்கள். புது படம் எப்படா வரும்? எப்போ நமீதாவ போடலாம், சாரி எப்போ நமீதா விமர்சனத்தை போடலாம் அப்படின்னு என்னை மாதிரி நிறைய பேரு காத்துகிட்டு இருக்காங்க. சரி எந்திரனுக்கு அடுத்து இந்த தீபாவளிக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிற படம் எதுன்னு பார்த்தால், அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெற போகும் தொட்டுப்பார் படத்தின் ஹீரோவும், சமூக விழிப்புணர்வு படமான சிந்து சமவெளி ஹீரோயினும் இணைந்து கத்தும் மைனா!





அமெரிக்க எஜமான் ஒபாமா மும்பை வரப்போறதை அடுத்து மும்பை மாநகராட்சி பரபரப்பா மும்பையோட சாலை, தெருக்களை எல்லாம் சுத்தம் செய்து, பிச்சைகாரர்களை எல்லாம் அப்புறபடுத்தி, அழகாய் பராமரிப்பு செய்து வருகிறார்களாம். நல்லதுதான். ஆனால் ஒபாமாவை அப்படியே சென்னைக்கு வர சொல்லி அடையாறு, திருவான்மியூர்,  தரமணி to தாம்பரம் சாலை வழியாக வேளச்சேரியில் கட் எடுத்து அப்படியே சைதாபேட்டை டாஸ்மாக்கில் ஒரு ரவுண்டு சரக்கை ஏத்திவிட்டு இன்னும் எந்தெந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளதோ அந்த வழியெல்லாம் சுறாவளி பயணத்தை மேற்கொள்ள செய்து  கூவத்தையும் சிறிது பார்வையிட சொல்லுங்கள். தமிழ் செம்மையாகுதோ இல்லையோ சென்னை கொஞ்சம் செம்மையாக வாய்ப்பு உள்ளது. ஓரம்போ... ஓரம்போ...ஒபாமா வண்டி வருது.
 

வேளச்சேரில இருக்கிற ஹோண்டா ஷோரூம்ல இருந்து புது Shine பைக் வாங்கி இருக்கான்  என் பிரெண்டு. ஆனா அந்த ஷோரூம்ல கஸ்டமர் சர்வீஸ் சரி இல்லையாமாப்பாம். பயங்கர டென்சன் ஆகி அத பத்தி என்னோட ப்ளாக்குல போட சொன்னான். தினமும் ஒரு ஆயிரம் பேரு வந்து நம்ம ப்ளாக் படிக்க, நாம என்ன பெரிய கேபிள் சங்கரா? இருந்தாலும் என்னோட பிளாக்கையும் மதிச்சு அதை போட சொன்னான் பார்த்திங்கல்ல? நண்பேண்டா!




ஒருநாள் காலைல வீட்டுல குளிச்சிட்டு, கொடியில ஜட்டி காய போடும் போது பார்த்தால், பக்கத்துல காய்ந்து கொண்டு இருந்த என் பிரெண்டோட ஜட்டியில ஓசோன் படலம் மாதிரி ஏகப்பட்ட ஓட்டைகள். காலை சூரியனோட ஒளி அப்படியே எல்லா ஓட்டைகளின் வழியாகவும் புகுந்து லேசர் லைட் ஷோ மாதிரி அப்படி ஒரு பிரமாண்டம். என்னடா காரணம்ன்னு கேட்டால், அதிகபடியான நச்சுத்தன்மை கலந்த காற்றும், இரு புவி கோளங்களின் மிகுந்த வெப்பமும் தானாம்.


இந்தவார சோக செய்தி : உலக கோப்பைல எந்தெந்த நாடு ஜெயிக்கும் அப்படின்னு சரியா ஆருடம் சொல்லி கால்பந்து ரசிகர்கள் வயித்துல பால் வார்த்த ஆக்டோபஸ் Paul-க்கு பால் ஊத்திடாங்க. இந்த ஆக்டோபச வச்சு நானும் ஒன்னு ரெண்டு கவிதை எழுதி பொழப்ப ஓட்டியாச்சு.


அனைவருக்கும் ஆபாயிலின் சார்பாகவும், நமீதா விமர்சனத்தின் சார்பாகவும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.





Oct 29, 2010

புறாவை புறக்கணிப்போம்

"புறாவை புறக்கணிப்போம்" என்பதை யாரும் தூக்கத்துலயோ, மப்புலையோ "பிராவை புறக்கணிப்போம்" ன்னு தப்பா படிச்சுறாதிங்க. அதுவும் பெண்கள்.



அபார்ட்மென்ட்ல வசித்து கொண்டிருக்கும் எல்லோரும் எதிர்கொள்ளும்  ஒரு சாதாரண பிரச்சனை தான் இது.  வேலைக்கு போயிட்டு வந்து வண்டிய வெளிய விட்டுட்டு காலையில் வந்து பார்த்தால் நமது பைக், கார்களின் மீது தங்களது காலைக்கடனை கச்சிதமாய் முடித்துவிட்டு போயிருக்கும் அபார்ட்மென்ட் புறாக்கள். இந்த பிரச்சனை எனக்கும், என்னோட பைக்குக்கும் ரொம்பவே பழகி போச்சு.


ஆனா, போன வாரம் என்னோட தங்கி இருக்கிற பிரெண்டு புதுசா ஒரு "ஹோண்டா சைன்" பைக் வாங்கி சீட் கவர், டேங்க்  கவர் எல்லாம் போட்டு அழகா நிறுத்தி வச்சிருந்தான். முதல் நாள் மதியம் ஆபிஸ் போறதுக்காக வண்டிய எடுக்க போனாவன், கொளுத்துற வெயில்ல அப்படியே ப்ரீஜ் (Freeze) ஆகி நின்னுட்டான். அப்பொழுது தான் ஒரு புறா தன் காலைக்கடனை ரொம்ப லேட்டா முடிச்சிட்டு போயிருக்கு. சாதாரணமா அவன் சீட்டுல, தான் உட்காரும் இடத்தை மட்டும் தான் துடைப்பான். அன்னிக்கு முழு சீட்டையும் தண்ணி போட்டு மெதுவா ரொம்ப பொறுமையா துடைச்சுக்கிட்டு இருந்தான்


அடுத்த நாள் ஒரு அரை டஜன் புறாக்கள் சீட் கவர், டேங்க்  கவர் எல்லாத்தையும் சேர்த்து முழு வண்டியையும் கவர் பண்ணிட்டு போயிருந்தது. "மச்சான் இங்க வாங்கடா, இங்க ஒரு புது பைக் நிக்குது" அப்படின்னு ஒரு புறா கால் பண்ணி மத்த எல்லா புறாவையும் கூப்பிட்டிருக்கும்ன்னு நினைக்கிறேன்.


வண்டிய வாங்குறதுக்கு முன்னாடி "புது வண்டிய வாங்குனதுக்கு அப்புறம் உங்க எவனையுமே பின்னால வச்சு ஓட்ட மாட்டேன். ஏதாவது ஒரு அழகான பெண் புறாவ (பிகரு) வச்சு ஒட்டுனதுக்கு அப்புறம் தான் உங்களை வண்டியில த்துவேன்" அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தான். ஆனா கடவுள் உண்மையான பெண் புறாவையே உட்கார வச்சு அவன் ஆசைப்பட்டதை நிறைவேத்திட்டார்.

என் ப்ரெண்டுக்காக நான் எழுதிய சிச்சுவேசன் கவிதை.

வண்ண வண்ணமாய் 
அழகிய  நிறங்களில்
எங்கள் அபார்ட்மென்ட்டில்
வசிக்கும் புறாக்கள் 
அதன் அத்துணை வண்ணங்களையும்(shit)
கொட்டி விட்டு சென்றிருந்தது 
என் புது பைக் சீட்டில்.


ஒவ்வொரு அபார்ட்மென்ட்லயும் மாசாமாசம் மீட்டிங் போடுற மாதிரி, சில சமயம் எல்லா புறாவும் ஒரே பைக் மேல மீட்டிங் போட்டு சமோசா சாப்பிட்டுட்டு, பீட்சா டெலிவரி பண்ற மாதிரி மேட்டர டெலிவரி பண்ணிட்டு போய்டும். அதுவும் ஏதோ ஒரு நாள் மறந்து வீட்டு ஜன்னல் கதவை சாத்தாமல் விட்டு விட்டால், உள்ளே புகுந்து கிச்சன் இருக்கிற பாத்திரங்களை எல்லாம் தள்ளி புட்பால் மேட்ச் ஆடிட்டு போய்டுது.


சென்னை சிட்டியில் காக்காக்களை விட புறாக்கள் தான் அதிகமாய் இருக்கும் போல. பக்கத்துல இருக்கிற வேடந்தாங்கல்ல இருந்து வழி மாறி வந்திருக்கலாம். சரி இதெல்லாம்  எப்படி சாப்பிட்டு உயிர் வாழ்கிறது என்று பார்த்தால்,  இங்கிருக்கும் மக்கள் காக்காவுக்கு பதில் புறாவுக்கு தான் சோறு வைக்கிறார்கள். ஒருவேளை சிட்டியில் இருக்கிறவங்க தங்கள் இறந்து போன சொந்தக்காரர்கள் புறாக்களாய் தான் பிறக்கிறார்கள் என்று நம்புகிறார்களோ என்னவோ?


நாம இப்படி வண்டிய அசிங்கம் பண்ற புறாக்களை புறக்கணிக்கிறதை பத்தி பேசிகிட்டு இருக்கும் போது, புறாக்கள் அடுத்த லெவலுக்கு யோசிக்க ஆரம்பிச்சிடுச்சு. எப்படி நம்ம மேலயே ஷிட் பண்றதுன்னு புக் வாங்கி படிக்குதுங்க.


படிச்சுட்டு ஒன்னு உடனே பிராக்டிகலா செய்தும் பார்த்திடுச்சு.


இன்னொன்னு ஒரு படி மேலே போய், சாவகாசமா தலையில உட்காந்து வேலைய முடிச்சு Distinction -ல பாஸ் ஆகிடுச்சு.




இரண்டு  நாட்டுக்கு இடையில் உள்ள பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர சமாதான புறாவை பறக்க விடுவாங்க. ஆனா இங்க புறாவே சமாதானத்துக்கு பிரச்சனையா இருக்கு. அதுக்கு ரெண்டு வழி தான் இருக்கு. சிட்டியில சுத்துற எல்லா புறாக்களையும் புடிச்சு, சமைச்சு சாப்பிடலாம் (அல்லது) ஜட்டி போட்டு விடலாம்.






Oct 27, 2010

ரங்கூஸ்கியுடன் ஒரு ராத்திரி - ஒரு இனிய அனுபவம்



ரங்கூஸ்கியுடன் ஒரு ராத்திரி அப்படிங்கற தலைப்ப பார்த்த உடனே நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்கும். அப்படி தெரியாம அவசர அவசரமா லிங்க்க கிளிக் பண்ணி உள்ள வந்திருந்திங்கன்னா, நீங்க

  • உலக படமான எந்திரனை இன்னும் பார்க்கவில்லை. (இது மட்டும் கலாநிதி மாறனுக்கு தெரிஞ்சுது, இதுக்கு தனியா உங்க மேல கேசு போட்டு லீகலா நடவடிக்கை எடுப்பார்)
(அல்லது)
  • ஆறாவது படிக்கும் போதே செக்ஸ் புக்கை தமிழ் புக்குக்கு நடுவுல வச்சு படிச்சு சங்க தமிழ் வளர்த்த சங்க பிரபுவாக இருக்கலாம். (எந்திரன் படத்தை பார்த்தும் உலக அழகி ஐஸ்வர்யாவை கடித்த ரங்கூஸ்கியையும் சுத்தமாய் மறந்து, குஜாலான மேட்டருன்னு நினைச்சு தெரியாம உள்ள பூந்துட்டிங்க)

இது ரெண்டுல எது உண்மைன்னு பின்னூட்டத்துல மரியாதையா சொல்லிடுங்க. இல்ல நானா கண்டு பிடிச்சேன், அப்புறம் ரங்கூஸ்கிய ஏவி விட்டு, கடிச்சு கடிச்சு விளையாட சொல்லுவேன்.

சரி மேட்டருக்கு வர்றேன். (ஹைய்! உண்மையாலுமே மேட்டரு தானா?)

நைட்டு ஆனா, படுத்து கண்ணா மூடினாலும் தூங்க முடியல. முழிச்சி இருந்தாலும் தூக்கம் வரல. என்னது, யாருமேலாவது லவ்வு வந்திருச்சான்னு கேட்கிறிங்களா? அதுதான் நமக்கு காலைல எந்திருச்சா வர்ற உச்சா மாதிரி அடிக்கடி வருதே. அப்புறம் வேறென்ன?

சென்னைல இந்த ரங்கூஸ்கிகளின் தொல்லை தாங்க முடியல. உலக அழகிய கடிச்சுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தான. அத விட்டுட்டு நீயும் ஒரு உலக அழகன்தான் அப்படின்னு என் காதுல வந்து கொய்யுன்னு கத்திகிட்டே கடிச்சு டார்ச்சர் பண்ணுதுங்க. இதுல அடிக்கடி நீங்க ரொம்ப நல்லவர்ன்னு வேற பாராட்டு. சரி, நானும் என்னை உலக அழகன்னு சொன்னதுக்காக எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது?

பொருத்தது போதும்ன்னு பொங்கி எழுந்து போர்த்தினாலும், "சந்தோஷ் சுப்ரமணியம்" படத்துல ஜெனிலியாவுக்கு போடுறமாதிரி ஒரு பெரிய ஊசியா போட்டு மறுபடியும் ஒரே பாராட்டு தான். நானும் கலைஞர் வீட்டுக்கு வழி காமிச்சு, "அவுர போய் பாராட்டுங்க. உங்க கூட்டத்துக்குன்னு தனியா ஒரு இடம் பரிசா கொடுத்து, பட்டாவும் போட்டு கொடுப்பாரு" அப்படின்னு சொன்னாலும் காதுலையே வாங்க மாட்டேன்குதுங்க. மார்கழி மாசமே இன்னும் வரல அதுக்குள்ள தினமும் காதுல ஏகப்பட்ட பஜனை. இனிமேல் கொசுக்கடிய பத்தி இந்த மாதிரி கவிதை எல்லாம் சத்தியமா எழுத மாட்டேன்.

சரி மேல மொட்டை மாடில போய் தூங்கலாமன்னு யோசிக்கும் போது, வீட்டுல படுத்தாவே ஜன்னல் வழியா தூக்கி கீழ போட்டு கொன்னுரும். மொட்டை மாடின்னா சும்மா விடுமா? அழகா தூக்கிட்டு போய் கீழ தள்ளி முட்டைய உடைச்சு ஆபாயில் போடுற மாதிரி, மண்டைய உடைச்சு இருக்கிற எல்லா ரத்தத்தையும் குடிச்சிட்டு போயிடும்.

பகல்ல கடிக்கிற கொசுவினால் தான் சிக்கன் குனியா வருது அப்படின்னுட்டு  (அப்போ, சிக்கன் அதிகமா சாப்பிடரதனால இல்லையா?) நீ என்னை நல்லா கடிச்சுக்கோ சொல்லி காலை விரிச்சு படுக்க முடியுமா என்ன?

சென்னைல இது மழை சீசன்னு சொல்லாம, ரங்கூஸ்கி சீசன்னு சொல்லலாம். பல்லி, பாம்புன்னு வச்சு அனகோண்டா மாதிரி பெரிய பெரிய ஹாலிவுட் படமெல்லாம் எடுக்கறாங்களே, இந்த கொசுவ வச்சு யாரும் படம் எடுக்க மாட்டாங்களா? ரங்கூஸ்கி மாதிரி பெரிய சைஸ் கொசுவெல்லாம் சேர்ந்து மனுசங்கள கடிச்சு நிமிசத்துல கொல்ற மாதிரியும், கடைசியா ஹீரோ வந்து காட்ஸிலா படத்துல வர்ற மாதிரி, கொசு முட்டை இடற இடத்தை கண்டு பிடிச்சு எல்லா கொசுவையும் குட்டியோடு சேர்த்து கொல்ற மாதிரி படம் எடுத்தாலாவது நமக்கெல்லாம் கொஞ்சமாவது சந்தோசமா இருக்கும்.

அப்படி ஒரு படம் கொசுவ வச்சு மிகவும் பிருமாண்டமா கொஞ்சம் காமெடி கலந்து எடுக்க, நம்ம சங்கர தவிர எனக்கு யாரும் தெரியல. எந்திரன்ல வந்த அந்த சின்ன கொசு சீனை பார்த்த, பக்கத்துல இருந்த ஒரு மூணு வயசு குழந்தை சிரிச்சு சிரிச்சு அதுக்கு கண்ணுல தண்ணியே வந்திடுச்சு (ஒருவேளை அது அழுதுகிட்டு இருந்ததோ?).


டிஸ்கி: 
இந்த பதிவு ரங்கூஸ்கிகளின் தொல்லை தாங்காமல் இரவு இரண்டு மணிக்கு எழுந்து எழுதப்பட்டு, அனைத்து ரங்கூஸ்கிகளுக்காகவும் டெடிகேட் செய்யப்பட்டது.
இந்த பதிவு எழுதிகிட்டு இருக்கும் போது பக்கத்துல படுத்திருந்த என் பிரெண்டு கேட்டார் "ஏசி இருந்தா கொசு வராதுல?" ஆமாய்யா, கொசுக்கு குளிர் அடிச்சு போய் போர்வை போர்த்தி படுத்து தூங்கிடும். போய்யா யோய்!