போனவாரம் ஞாயிற்று கிழமை வாரமலர் நடுப்பக்க செய்தியை புரட்டி பார்த்த என்னை அப்படியே கீழே புரட்டி போட்டது அந்த துணுக்கு. நம்ம தலைவி நமீதா "இ.பி.கோ., 376" என்ற படத்தின் மூலமாக புலன் ஆய்வு செய்யும் கடமை மற்றும் "உடை"மை தவறாத ஸ்ட்ரிக்ட் ஆன சி.ஐ.டி போலீஸாக நடிக்கிறாராம். இதற்காக தனது பெருத்த உடற்கட்டை சீக்கிரம் குறைக்க பில்லாவிடம் ஐடியா கேட்டுவருகிறாராம். இதை தயாரிப்பது டூயட் மூவிஸ் தான் என்றாலும் இதில் நமீதாவுக்கு டூயட் ஏதும் இல்லையாம்.
மக்கள் எல்லோருக்கும் தீபாவளி வரப்போகுது அப்படிங்கறத விட எந்திரன் படம் முக்கால் வாசி(?) தியேட்டர விட்டு போக போகுது அப்படிங்கரதுதல தான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். இருந்தாலும் வரலாற்று படமான இப்படத்தை பார்த்து ஜென்ம சாப விமோசனம் அடைந்து விடுங்கள் அல்லது அவர்கள் விமோசனம் கொடுத்து விடுவார்கள். புது படம் எப்படா வரும்? எப்போ நமீதாவ போடலாம், சாரி எப்போ நமீதா விமர்சனத்தை போடலாம் அப்படின்னு என்னை மாதிரி நிறைய பேரு காத்துகிட்டு இருக்காங்க. சரி எந்திரனுக்கு அடுத்து இந்த தீபாவளிக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிற படம் எதுன்னு பார்த்தால், அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெற போகும் தொட்டுப்பார் படத்தின் ஹீரோவும், சமூக விழிப்புணர்வு படமான சிந்து சமவெளி ஹீரோயினும் இணைந்து கத்தும் மைனா!
அமெரிக்க எஜமான் ஒபாமா மும்பை வரப்போறதை அடுத்து மும்பை மாநகராட்சி பரபரப்பா மும்பையோட சாலை, தெருக்களை எல்லாம் சுத்தம் செய்து, பிச்சைகாரர்களை எல்லாம் அப்புறபடுத்தி, அழகாய் பராமரிப்பு செய்து வருகிறார்களாம். நல்லதுதான். ஆனால் ஒபாமாவை அப்படியே சென்னைக்கு வர சொல்லி அடையாறு, திருவான்மியூர், தரமணி to தாம்பரம் சாலை வழியாக வேளச்சேரியில் கட் எடுத்து அப்படியே சைதாபேட்டை டாஸ்மாக்கில் ஒரு ரவுண்டு சரக்கை ஏத்திவிட்டு இன்னும் எந்தெந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளதோ அந்த வழியெல்லாம் சுறாவளி பயணத்தை மேற்கொள்ள செய்து கூவத்தையும் சிறிது பார்வையிட சொல்லுங்கள். தமிழ் செம்மையாகுதோ இல்லையோ சென்னை கொஞ்சம் செம்மையாக வாய்ப்பு உள்ளது. ஓரம்போ... ஓரம்போ...ஒபாமா வண்டி வருது.
வேளச்சேரில இருக்கிற ஹோண்டா ஷோரூம்ல இருந்து புது Shine பைக் வாங்கி இருக்கான் என் பிரெண்டு. ஆனா அந்த ஷோரூம்ல கஸ்டமர் சர்வீஸ் சரி இல்லையாமாப்பாம். பயங்கர டென்சன் ஆகி அத பத்தி என்னோட ப்ளாக்குல போட சொன்னான். தினமும் ஒரு ஆயிரம் பேரு வந்து நம்ம ப்ளாக் படிக்க, நாம என்ன பெரிய கேபிள் சங்கரா? இருந்தாலும் என்னோட பிளாக்கையும் மதிச்சு அதை போட சொன்னான் பார்த்திங்கல்ல? நண்பேண்டா!
ஒருநாள் காலைல வீட்டுல குளிச்சிட்டு, கொடியில ஜட்டி காய போடும் போது பார்த்தால், பக்கத்துல காய்ந்து கொண்டு இருந்த என் பிரெண்டோட ஜட்டியில ஓசோன் படலம் மாதிரி ஏகப்பட்ட ஓட்டைகள். காலை சூரியனோட ஒளி அப்படியே எல்லா ஓட்டைகளின் வழியாகவும் புகுந்து லேசர் லைட் ஷோ மாதிரி அப்படி ஒரு பிரமாண்டம். என்னடா காரணம்ன்னு கேட்டால், அதிகபடியான நச்சுத்தன்மை கலந்த காற்றும், இரு புவி கோளங்களின் மிகுந்த வெப்பமும் தானாம்.
இந்தவார சோக செய்தி : உலக கோப்பைல எந்தெந்த நாடு ஜெயிக்கும் அப்படின்னு சரியா ஆருடம் சொல்லி கால்பந்து ரசிகர்கள் வயித்துல பால் வார்த்த ஆக்டோபஸ் Paul-க்கு பால் ஊத்திடாங்க. இந்த ஆக்டோபச வச்சு நானும் ஒன்னு ரெண்டு கவிதை எழுதி பொழப்ப ஓட்டியாச்சு.
அனைவருக்கும் ஆபாயிலின் சார்பாகவும், நமீதா விமர்சனத்தின் சார்பாகவும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.